V2025

பதில் அமைச்சர்கள் நியமனம்!

இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்களின் அமைச்சுக்களுக்கு பொறுப்பாக சில பதில் அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராஜினாமா செய்த ரிஷாட் பதியுதீன் வகித்த கைத்தொழில், வர்த்தகம், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக புத்திக பத்திரன ஜனாதிபதி முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

கபீர் ஹாஷிமின் பொறுப்பில் இருந்த நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக அனோமா கமகே பதவியேற்றுள்ளார்.

அத்துடன் ரவூப் ஹக்கீமின் பொறுப்பில் இருந்த நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக லக்கி ஜயவர்த்தன பதவியேற்றுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found