V2025

புதிய வீதி ஒழுங்குச் சட்டம் அமுல்!

இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன நெரிசல் மற்றும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பஸ்கள் வீதியின் வலது பக்கத்தில் செல்ல வேண்டும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பஸ்களுக்காக பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷேட வீதி நிரல் கொழும்பு, கல்கிசை வெலிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக வலதுபுறத்தில் பொது போக்குவரத்து பஸ்கள் செல்லும் நடைமுறை, நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found