V2025

மங்கள சமரவீரவினால் CID யில் முறைப்பாடு!

அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் கார்தினால் மெல்கம் ரஞ்சித்தின் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கும் வகையில், வத்திக்கானுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் அப்பட்டமான பொய் எனவும் அவற்றில், எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லை எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கார்தினால் மெல்கம் ரஞ்சித், கடந்த 03 ஆம் திகதி உண்ணாவிரதம் இருந்த ரத்தன தேரரை பார்க்கச் சென்றமையை சுட்டிக்காட்டி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஜூன் 03ஆம் திகதி வத்திக்கானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக, குறிப்பிட்ட கடிதத்தின் பிரதியுடன் சமூக வலைத்தளங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுதொடர்பில் இன்று (07) பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, தனது பெயரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் கடிதம் போலியானது என்றும், தான் இவ்வாறன கருத்துக்களை தெரிவித்து எவ்வித கடிதங்களையும் வத்திக்கானுக்கு அனுப்பவில்லை என்றும் கூறினார்.

அத்துடன் இது தொடர்பில், அமைச்சர் மங்கள சமரவீர இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 WhatsApp Image 2019 06 07 at 4.53.15 PM

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found