V2025

கருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை!

சிங்களத் தாய்மார்கள் 4000 பேருக்கு சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டாதாகக் கூறி குருநாகல் போதனா வைத்தியசாலை மருத்துவர் ஷாபி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, நாட்டில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக குருநாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்திற்கு எதிராக மூன்று பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் (CID) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

01.இனவாதக் கருத்துக்களை நேரடியாக ஊடகங்களுக்கு வழங்கியமை,

02.இனவாத வன்முறைகளை தோற்றுவிக்கும் விதத்திலான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை.

03.அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பியமை 

ஆகிய 3 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் CID யினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found