V2025

சட்டத்திற்கு அமைவான அமைச்சரவை நியமனத்திற்கு ஜப்பான் வரவேற்பு!

இலங்கையுடன் நீண்டகாலமாக நட்புறவைக் கொண்டுள்ள நாடென்ற வகையில், சட்டத்திற்கு அமைவான முறையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை உட்பட இலங்கையில் அரசியல் ஸ்திரநிலையை நோக்கிய அண்மைய முன்னேற்றங்களை வரவேற்பதாக, இலங்கைக்கான ஜப்பானியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு பங்களிப்புச் செய்த அனைத்து தரப்பினரையும் பாராட்டுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலும் இந்து-பசுபிக் பிராந்தியத்திலும் சமாதானம், ஸ்திரநிலைமை மற்றும் சுபீட்சத்தை அடைவதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், ஜப்பான் 'விரிவான கூட்டுப்பங்காண்மையை மேலும் வலுப்படுத்த தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

48423170 532156117259692 8612307450307018752 n

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found