V2025

புதிய அமைச்சரவை விபரங்கள்!!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை (20) நியமிக்கப்பட்டது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஜனாதிபதி முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஊடகங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறைக்குள் அழைக்கப்பட்டு, அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க :- பொருளாதார, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர்.

ஜோன் அமரதுங்க :-  சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர்.

காமினி ஜயவிக்ரம பெரேரா:- புத்தசாசனம் வடமேல் விவகார அமைச்சர்.

மங்கள சமரவீர:- நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்.

லக்ஷ்மன் கிரியெல்ல:- அரச விவகாரம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்.

ரவூப் ஹக்கீம்:- நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்.

திலக் மாரப்பன:- வெளிவிவகார அமைச்சர்.

ராஜித சேனாரத்ன:-  சுகாதாரம், போசனை, சுதேச வைத்திய அமைச்சர்.

ரவி கருணாநாயக்க:- மின்சாரம் மீள் புதுப்பிக்கத்தக்க அமைச்சர்.

வஜிர அபேவர்தன:- உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர்.

ரிஷாத் பதியூதின்:- கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்.

பட்டாலி சம்பிக்க ரணவக்க:- நகர திட்டமிடல் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.

நவீன் திஸாநாயக்க:- பெருந்தோட்டத்துறை அமைச்சர்.

பி.ஹரிஸன்:- விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்.

கபீர் ஹாசிம்:- நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்.

ரஞ்சித் மத்தும பண்டார:- அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்.

கயந்த கருணாதிலக்க:- காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்.

சஜித் பிரேமதாஸ:- வீடமைப்புத்துறை மற்றும் கலாசார அமைச்சர்.

அர்ஜூண ரணதுங்க:- போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்.

பழனி திகாம்பரம்:- மலை நாட்டுப் புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர்.

சந்திராணி பண்டார:- மகளிர் விவகார மற்றும் சிறுவர் விவகார அமைச்சர். 

தலதா அத்துக்கோரள:- நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்.

அகிலவிராஜ் காரியவசம்:- கல்வி அமைச்சர்.

அப்துல் ஹலீம் மொஹமட்:-  தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர்.

சகால ரத்னாயக்க:- துறைமுகங்கள் மற்றும் தென்மாகாண பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.

ஹரீன் பெர்னாண்டோ:- தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.

மனோகணேசன்:- தேசிய நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்.

தயாகமகே:- தொழிலுறவு அமைச்சர்.

மலிக் சமரவிக்ரம:- சர்வதேச வர்த்தக முதலீட்டு அமைச்சர்.

எனினும், சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கான அமைச்சர் இதன்போது நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found