V2025

குமார வெல்கம எம்.பியின் அதிரடி அறிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்யும் எந்தவொரு கூட்டத்திலும் இனி கலந்துகொள்ள போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட குமார வெல்கம,

“அதன்படி ஜனாதிபதி தலைமையில் நேற்று காலையில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொள்ள வில்லை. இதற்கு பிறகு ஜனாதிபதியுடன் நடைபெறும் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாது புறக்கணிக்க போகிறேன்.” என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவிலிருந்து தான் நீக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதியுடன் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை எனவும் குமார வெல்கம மேலும் தெரிவித்தார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found