V2025

"நிறைவேற்று அதிகாரம்" பாராளுமன்றில் விவாதம்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்குவது தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை ஜேவிபி பாராளுமன்றத்தில் சற்று முன்னர் கொண்டுவந்துள்ளது.

ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிச இதனை சமர்ப்பித்துள்ளார்.

இந்த பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியுள்ள நளின்ஜயதிச  நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிக்கப்படுவதையே விரும்புகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக பல முறை வாக்களித்துள்ளார். அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இந்த வாக்குறுதி காணப்படுகின்றது என ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் சில அதிகாரங்கள் பறிக்கப்பட்டன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகார முறையை நீக்குவேன் என தம்பட்டம் அடித்த ஜனாதிபதி சிறிசேன, தற்போது 19 வது திருத்தத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றார் எனவும்  ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜேவிபியின் இந்த பிரேரணைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஆதரவளிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

ஐக்கியதேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவீர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

சமீபத்தில் இடம்பெற்ற விடயங்கள் ஏன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found