V2025

அரசுக்கு ஏன் ஆதரவு - விஜித் விஜியமுனி சொய்சா!!

அரசுக்கு ஆதரவை வழங்க நாங்கள் முடிவெடுக்க பல காரணங்கள் உள்ளன. அரசியல் நெருக்கடி நாட்டின் எல்லா மக்கள் தரப்பிலும் உணரப்பட்டது என சற்று முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜியமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியின் சுமை மக்கள் மீதே சுமத்தப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் தொண்டர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நான் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர். எனது தந்தை மூத்த உறுப்பினர். அன்று எங்களுக்கு வழிகாட்ட யாரும் இருக்கவில்லை.

ஆனாலும் நாங்கள் போராடி வந்தோம். ஆனால் இன்று எங்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தியது யார்? மஹிந்தவை மதிக்கிறேன் ஆனால் அவருடன் இருப்பவர்கள் காரணமாக நாங்கள் இப்படி ஆகினோம் .

நாங்கள் கட்சிக்கு உயிரை கொடுத்தோம் ஆனால் எங்களுக்கு என்ன நடந்தது? நான் ஜனாதிபதியை மதிக்கிறேன் ஆனால் எங்களை நீங்கள் எங்கே வைத்தீர்கள்?நாட்டில் அரசியல் ஸ்திர நிலையை ஏற்படுத்தவே நாங்கள் இந்த முடிவெடுத்தோம் . அதனால் தான் இந்த கூட்டணியுடன் இணைந்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found