V2025

புதிய பிரதமருடன் கூடியது பாராளுமன்றம்!

பாராளுமன்றம் சற்றுமுன் (18) மதியம் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

கடந்த இரு மாதங்களாக நீடித்த அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின் இன்று பாராளுமன்ற அமர்வுகள் ஆர்மபிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றைய அமர்வில் பங்கேற்றுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜித்தமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, பியசேன கமகே ஆகியோர் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொண்டுள்ளதுடன், பாராளுமன்றில் ஆளுந்தரப்பினருடன் அமர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்றின் பார்வையாளர் கலரி இன்றையதினம் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found