V2025

பிரதமர் ரணிலுக்கு இந்தியா வாழ்த்து!

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, சுமார் 52 நாட்கள் அமைதி காத்து வந்த இந்தியாவின் மௌனம் தற்போது கலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்ற பின்னர், "இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை இந்தியா வரவேற்கின்றது" என இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

"பல்வேறு தரப்பினரின் முதிர்ச்சியான போராட்டங்களின் விளைவால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையுடன் இணைந்து ஒத்துழைத்துப் பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது" என இந்திய வெளியுறவு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் நஷீட்,  அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2018 12 17 at 1.05.13 PM

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found