இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் நெடுந்தொடர் ‘ராஜா ராணி ‘ ஆகும்.
இந்த நெடுந்தொடரில் முன்னனி கதாப்பாத்திரங்களில் கார்த்திக்காக சஞ்சீவ் மற்றும் சென்பாவாக ஆல்யா மானசாவும் நடிக்கின்றனர்.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நெடுந்தொடர் பலராலும் கண்டு மகிழப்படும் நெடுந்தொடராக காணப்படுகின்றது.
இந்த நெடுந்தொடரின் கதாநாயகன் சஞ்சீவ் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்.
சினிமாவில் சாதிக்க ஆசை என கூறும் சஞ்சீவ் ஏழு படங்களில் நடித்தும் தனக்கான ஒரு இடம் கிடைக்கவில்லை என்பதால் நெடுந்தொடரில் கவனம் செலுத்துவோம் என முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார்.
2 வருடங்களுக்கு முன்பாக ‘சரவணன் மீனாட்சி’ தேர்வில் கலந்துக்கொண்டும் வாய்ப்பு கிடைக்காத சஞ்சீவ்க்கு அதன் பின்பு ஒரு வருடம் கழித்து கிடைத்த வாய்ப்பு தான் ‘ராஜா ராணி’ நெடுந்தொடராகும்.
‘ராஜா ராணி’ நெடுந்தொடர் சஞ்சீவ்க்கு ஒரு திருப்பு முணையாக அமைந்ததென்றேக் கூற வேண்டும்.
இந்த வெற்றியின் அடுத்த கட்டமாக விரைவில் சஞ்சீவின் குறுந்திரைப்படம் ஒன்று வெளிவரவுள்ளது.
‘மன்னிப்பாயா’ எனும் பெயரில் வெளியிடப்படவுள்ள இந்த குறுந்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.