V2025

அம்மாவைக் கேட்டுத்தான் அரசியலில் முடிவெடுப்பேன்

'அம்மாவைக் கேட்டு அரசியல் நடத்துவது' என்றவுடன் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாபகம் வருவார்.

அதேபோல இன்றும் ராகுல் காந்தி தனது அரசியல் முடிவுகளுக்கு மட்டுமல்ல மேடைப் பேச்சுக்களையும் தன் அம்மா சோனியா காந்தியை கேட்டுத்தான் தயாரித்துக்கொள்ளவார்.

இதே போலவே யாழ்ப்பாணத்திலும் ஒரு பிரபல அரசியல் பின்னணி கொண்ட அரசியல்வாதி, தான் மேற்கொள்ளும் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் தன் அம்மாவைக் கேட்டுத்தான் முடிவுகளை மேற்கொள்கின்றாராம்.

ஒரு பரப்பான அரசியல் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழர் வாழ்வியலுக்குள், அவர்களின் அரசியல் வாரிசாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒருவர், தான் சார்ந்த மக்களுக்கான அரசியல் விடயம் ஒன்றைத்தானும் தாமாக முடிவெடுக்க முடியாமல் தன் தாயாரின் முடிவில் தான் அரசியல் நடத்துவாராயின் அவர் எப்படி ஒரு இனத்தின் அரசியல் தலைமைக்கு பொருத்தமானவராக இருக்க முடியும் என்பது இன்று அனைவரிடத்திலும் ஒரு கேள்வியாக இருக்கின்றது.

இல்லை, அவரால் முடிவெடுக்க முடியாவிட்டால் அந்த தாயாரே நேரடியாக கட்சிக்கு தலைமை தாங்கவேண்டுமே தவிர, ஒரு நிழல் தலைமையாக இருந்து தமிழர் தரப்பிற்கு ஒரு அரசியல் ஈடாட்டத்தை ஏற்படுத்தக்கூடாது என்பது மக்களின் கருத்து.

ஒரு தலைவன் தானாகவே முடிவெடுக்காமல், அம்மாவின் முடிவின்படி அரசியல் பாதையில் சைக்கிள் ஓடினால், மூச்சுத்தான் முட்டும். இலக்கை அடைய முடியாது.

நன்றி - ஐ.பி.சி தமிழ்

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found