V2025

பிக்பாஸ் போர் ; மஹத்தான் மாஸ் - சதீஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி போரடிக்கிறது என நடன இயக்குனர் சதீஷ் கூறியுள்ளார்.



கடந்த ஜூன் 17-ம் தேதி முதல் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.  மும்தாஜ், பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், மஹத் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

 

கடந்த முறை போன்று இந்த முறையும் இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. 


தற்போது இரண்டாவது வாரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் பாலாஜி - நித்யாவின் குடும்ப பிரச்னை பிரதானமாகியுள்ளது.

 

அவ்வப்போது மும்தாஜுக்கும் சக பங்கேற்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, ஓவியா- ஆரவ் போன்ற காதல் ஜோடிகளும் உருவாகி வருகின்றனர்.

 


இந்நிலையில் பிக்பாஸ் போட்டி போர் அடிப்பதாக நடன இயக்குநரும், நடிகருமான சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மேலும் நிகழ்ச்சியில் மும்தாஜ் மற்றும் மஹதி நகைச்சுவையாக இருக்கிறார்கள் என்றும் மஹத்தான் மாஸ் என்றும் கூறியுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found