பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.
பட்டி தொட்டி எங்கும் களைகட்டிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகியான ஓவியா மூன்று படங்களில் நடித்துவருகிறார்.
அதேபோல் ரைசா, ஹரிஷ் ஆகியோர் இணைந்து ஒரு படத்திலும், ஜூலி இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இவற்றில் அனிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமும் படமாகின்றது.
இந்த நிலையில் பிக்பாஸ்- 2 நிகழ்ச்சி பிரபலங்களை போட்டியாளர்களாக கொண்டு நேற்று முன் தினம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முறையும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.
பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கானவர்களின் உள்ளங்களை கவர்ந்த ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதேபோல் பிக் பாஸ் சீசன் 2 விலும் காலடி எடுத்து வைத்தார் ஓவியா.
எனினும் ஓவியா ரசிகர்களின் ஆசை நிராசையாகியாது.
ஓவ்வொரு நாளும் ஓவியாவை பார்த்து ரசிக்கலாம் என எண்ணிய ரசிகர்களுக்கு ஓவியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் என்பது மிகவும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
எது எவ்வாறாயினும் பிக் போஸ் வீட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அடிக்கடி ஓவியா சென்று வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த காலத்தில் ஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது. ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா தேவைப்படுகிறார். அதனால் தான் அவரை விருந்தாளியாக அழைத்துள்ளனர்.