கிசு கிசு

பிக்பாஸ் போர் ; மஹத்தான் மாஸ் - சதீஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி போரடிக்கிறது என நடன இயக்குனர் சதீஷ் கூறியுள்ளார்.கடந்த ஜூன் 17-ம் தேதி முதல் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.  மும்தாஜ், பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், மஹத் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

 

கடந்த முறை போன்று இந்த முறையும் இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. 


தற்போது இரண்டாவது வாரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் பாலாஜி - நித்யாவின் குடும்ப பிரச்னை பிரதானமாகியுள்ளது.

 

அவ்வப்போது மும்தாஜுக்கும் சக பங்கேற்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, ஓவியா- ஆரவ் போன்ற காதல் ஜோடிகளும் உருவாகி வருகின்றனர்.

 


இந்நிலையில் பிக்பாஸ் போட்டி போர் அடிப்பதாக நடன இயக்குநரும், நடிகருமான சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மேலும் நிகழ்ச்சியில் மும்தாஜ் மற்றும் மஹதி நகைச்சுவையாக இருக்கிறார்கள் என்றும் மஹத்தான் மாஸ் என்றும் கூறியுள்ளார்.

Comment (0) Hits: 552

ராஜா ராணி செம்பாவின் உண்மைக் காதலர் !

ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. சீரியலில் செம்பா என்ற அப்பாவி பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


இவர் அண்மையில் தன்னுடைய நடன குழு பற்றியும், சீரியல் வாய்ப்பு குறித்தும் பேசியிருந்தார்.

அப்போது தன்னுடன் பிரபல தொலைக்காட்சியில் நடனம் ஆடிய மானஸ் என்பவரிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளாராம்..


ஆனால் முதலில் செண்பாவின் காதலை நிராகரித்துள்ளார் மானஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் செண்பாவின் காதலை புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டாராம்.

மானஸ் தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்ட பிறகு மானஸ் என்பவர் செம்பாவின் பெயரையும், செம்பா மானஸின் பெயரையும் கையில் பச்சைக் குத்திக் கொண்டராம்.

 

இந்நிலையில் ராஜா ராணி சீரியலில் சஞ்சீவும், ஆலியா மானசாவும் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்  நிஜத்தில் அவர்கள் காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.

சஞ்சீவும், மானசாவும் நிஜத்தில் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லையாம். இதை சஞ்சீவே தெரிவித்துள்ளார்.

சீரியலில் கெமிஸ்ட்ரி நன்றாக வர வேண்டும் என்று நெருங்கி நடிக்கிறார்களாம்.


தானும் ஆல்யா மானசாவும் நண்பர்கள் மட்டுமே என்கிறார் சஞ்சீவ். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

ஆல்யா மானசா டான்ஸரான மானஸை காதலித்து வருகிறார். இதை மானசா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் சஞ்சீவ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும் என்று கூறியுள்ளது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Comment (0) Hits: 658

தைரியமிருந்தால் பிக்பாஸ் வீட்டிற்குள் போய் பார்க்கட்டும்- ஸ்ரீப்ரியாவிடம் சவால் விட்ட காயத்ரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து பேசும் ஸ்ரீப்ரியா தைரியமிருந்தால் பிக்பாஸ் வீட்டிற்குள் போய் பார்க்கட்டும் என காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் குறித்து பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
 
 
இதேபோல பல பிரபலங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த தங்களின் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதில் முக்கியமானவர் நடிகை ஸ்ரீப்ரியா. இவர் தன்னுடைய கருத்தை பகிரங்கமாகவும், தைரியமாகவும் இதுவரை பதிவு செய்து வருகிறார்.
 
 
குறிப்பாக பிக்பாஸ் முதல் சீசனிலிருந்து அவர் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
 

இந்தமுறையும் அவர் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல் சீசன் போட்டியாளர் காயத்ரி ரகுராம் தொடர் ட்விட்டர் கருத்துகளின் மூலம் ஸ்ரீபிரியாவை வறுத்தெடுத்துள்ளார்.
 
 
கடந்த முறை காயத்ரி ரகுராம் உபயோகித்த முடி என பொருள்படும் வார்த்தைகள் குறித்த நெட்டிசன் கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த வார்த்தை அவருக்கு பிடிக்கவில்லை என்றால் தலையில் அவர் ஏன் அதனை வைத்திருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
 

மேலும் ஸ்ரீப்ரியா தைரியமிருந்தால் பிக்பாஸ் வீட்டிற்குள் போய் பார்க்கட்டும் என காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.
 

பிக்பாஸ் முதல் சீசனில் ஸ்ரீப்ரியா, காயத்ரி ரகுராமை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comment (0) Hits: 551

வைரலாகியுள்ள நடிகர் விஜய்யின் மகன் வீடியோ!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பள்ளியில் பட்டம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 62’ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தளபதி 62 படத்தில் நடித்து வருகின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் பட்டம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷலாகவே தெரிவார்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய்யின் மகன் பட்டம் பெற்ற வீடியோவைப் பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comment (0) Hits: 577

ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா இடையே காதலா?

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ”பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷாரிக் ஹஸன், ஐஸ்வர்யா தத்தா இடையே காதல் இருப்பதாக சக போட்டியாளர்கள் கொளுத்திப் போட்டனர். சம்பந்தப்பட்ட இருவரும் வெட்கப்பட்டு சிரித்து சமாளித்தனர்.

 

டாஸ்க்கின் போது பேசிய ஷாரிக் ஐஸ்வர்யா பொத பொதவென இருப்பதால் பிடித்துள்ளது என்றார்.

 

ஷாரிக்கும், ஐஸ்வர்யாவும் இரவு 11 மணி அளவில் பேசிக் கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடியட்டும் எதிர்காலம் பற்றி வெளியே போய் முடிவு செய்யலாம் என்று பேசினார் ஷாரிக்.

 

நிகழ்ச்சியில் தன்மையுடன் நடந்து கொண்டிருக்கும் ஷாரிக் நிஜத்தில் கொழந்தப்புள்ள. ஆம், ஷாரிக்கிற்கு 19 வயது தான் ஆகிறது. ஆனால் ஆள் பார்க்க பெரியவர் போன்று தெரிகிறார்.

 

ஷாரிக் 1999 ஆம் ஆண்டு பிறந்தவர். ஐஸ்வர்யா தத்தாவோ 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இருவருக்கும் இடையே 9 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. தன்னை விட வயதில் பெரிய நடிகையை ஒரு நடிகர் காதலிப்பது ஒன்றும் புதிது அல்ல .

 

”பிக் பாஸ்” வீட்டில் உருவாகியுள்ள இந்த காதல் நிகழ்ச்சி முடிந்தும் நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஷாரிக் என்னவோ சீரியஸாக தான் காதலிக்கிறார்.  பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

 

Comment (0) Hits: 615

ராஜா ராணி நெடுந்தொடரின் சஞ்சீவ் மற்றும் மானசாவிற்குள் காதலா?

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் நெடுந்தொடர் ‘ராஜா ராணி ‘ ஆகும்.

இந்த நெடுந்தொடரில் முன்னனி கதாப்பாத்திரங்களில் கார்த்திக்காக சஞ்சீவ் மற்றும் சென்பாவாக ஆல்யா மானசாவும் நடிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நெடுந்தொடர் பலராலும் கண்டு மகிழப்படும் நெடுந்தொடராக காணப்படுகின்றது.

ராஜா ராணி நெடுந்தொடரில் ஜோடியாக நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் தான் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ஜோடி.

அவர்கள் நிஜத்திலும் காதலித்து வருகின்றனர் என கிசுகிசு வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘வித் மை பேபி’ என ஆல்யா மானசா பதிவிட்டார் என கூறப்படுகிறது.

இருவருக்கும் காதலா என ரசிகர்கள் கேள்வி எழுப்பவே, உடனே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார் என கூறப்படுகின்றது.

அதன் பின் “எங்கள் உறவை பற்றி தவறாக பேச வேண்டாம். யாரையும் குழப்ப விரும்பவில்லை.. இது ஒரு டேர் கேம். அதனால் தான் அப்படி பதிவிட்டேன்” என விளக்கம் தெரிவித்துள்ளார் ஆல்யா மானசா.

Comment (0) Hits: 605

ஆரவ்வுடன் இணைந்தாரா ஓவியா?

ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

விஜய் தொலைக்காட்சி தொடங்கிய “பிக் பாஸ்” சீசன் - 1  நிகழ்ச்சியில்  15 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார் ஓவியா.

 

ஆரம்பத்தில் 15 பேரில் ஒருவராக இருந்தவர், தன் வெளிப்படைத் தன்மையால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

 

அவரது  புறம் பேசாமை, வெகுளித்தனம் ஆகிய குணங்களாலும் நடனத்திறனாலும் கவரப்பெற்ற ரசிகர்கள், ஒவ்வொரு வாரம் உடன் இருப்பவர்களால் நாமினேட் செய்யப்பட்டபோதும், ஓட்டு போட்டு அவரை பிக் பாஸ் வீட்டிலேயே இருக்க வைத்தனர்.

 

ஓவியா ஆர்மி, ஓவியாஇஸம் என்றெல்லாம் நெட்டிசன்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.  

 

ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார்.

 

அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள்.

 
அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர்.
 
இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
 
இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் பேச்சு கிளம்பி உள்ளது.
Comment (0) Hits: 622

சக்கை போடு போடும் ‘ராஜா ராணி ‘   கார்த்திக்கின் பாடல் !

‘ராஜா ராணி ‘  நெடுந்தொடரில் கார்த்திக் எனும் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சீவ் நடித்த  ‘மன்னிப்பாயா ‘குறுந்திரைப்படத்தின் பாடல் ஒன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இந்த பாடல் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் முழு குறுந்திரைப்படத்தையும் எப்போது பார்ப்போம’ என மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் நெடுந்தொடர் ‘ராஜா ராணி ‘ ஆகும்.

இந்த நெடுந்தொடரில் முன்னனி கதாப்பாத்திரங்களில் கார்த்திக்காக சஞ்சீவ் மற்றும் சென்பாவாக ஆல்யா மானசாவும் நடிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நெடுந்தொடர் பலராலும் கண்டு மகிழப்படும் நெடுந்தொடராக காணப்படுகின்றது.

இந்த நெடுந்தொடரின் கதாநாயகன் சஞ்சீவ் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்.

சினிமாவில் சாதிக்க ஆசை என கூறும் சஞ்சீவ் ஏழு படங்களில் நடித்தும் தனக்கான ஒரு இடம் கிடைக்கவில்லை என்பதால் நெடுந்தொடரில் கவனம் செலுத்துவோம் என  முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார்.

2 வருடங்களுக்கு முன்பாக ‘சரவணன் மீனாட்சி’ தேர்வில் கலந்துக்கொண்டும் வாய்ப்பு கிடைக்காத சஞ்சீவ்க்கு அதன் பின்பு ஒரு வருடம் கழித்து கிடைத்த வாய்ப்பு தான் ‘ராஜா ராணி’ நெடுந்தொடராகும்.

‘ராஜா ராணி’ நெடுந்தொடர் சஞ்சீவ்க்கு ஒரு திருப்பு முணையாக அமைந்ததென்றேக் கூற வேண்டும்.

இந்த வெற்றியின் அடுத்த கட்டமாக விரைவில் சஞ்சீவின் குறுந்திரைப்படம் ஒன்று வெளிவரவுள்ளது.

‘மன்னிப்பாயா’ எனும் பெயரில் வெளியிடப்படவுள்ள இந்த குறுந்திரைப்படத்தின் பாடல் ஒன்று தற்பொழுது வெளியாகி சக்கை போடு போடுகின்றது.

இந் நிலையில் ‘மன்னிப்பாயா’ குறுந்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comment (0) Hits: 651

விஜய்யின் பிறந்தநாள் அன்று ஆர்யாவின் வீட்டில் காதல் திருமணம்!

விஜய்யின் பிறந்தநாள் அன்று ஆர்யாவின் வீட்டில் காதல் திருமணம் நடைபெற உள்ளது.


நடிகர் ஆர்யாவுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.


அவருக்கு பெண் தேட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுடன் நன்றாக பேசிய ஆர்யா இறுதியில் யாரையும் தேர்வு செய்யவில்லை.
அவருக்கு பெண் தேடி அவரது பெற்றோர்கள் ஓய்ந்துவிட்டார்களாம்.

 

இந்நிலையில் தான் ஆர்யாவின் வீட்டில் திருமணம் நடைபெறுகிறது.

 

ஆர்யாவின் தம்பி சத்யா தனது காதலி பாவனாவை வரும் 22ம்திகதி அதாவது விஜய் பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொள்கிறார்.


இந்த திருமணத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.


காதல் சத்யா கல்லூரியில் படித்தபோது பாவனாவை சந்தித்து காதலில் விழுந்தாராம்.


அண்ணன் வழியில் நடிக்க வந்த சத்யா புத்தகம்இ அமரகாவியம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


சத்யாவின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கிறார்களாம்.

Comment (0) Hits: 727

அனிரூத்க்கு மெசேஜ் அனுப்பிய 9தாரா ..!

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.

இவர்களுடன் நெருக்கமான நட்புடன் பழகி வருகிறார் இசை அமைப்பாளர் அனிரூத்.

விக்னேஷ் சிவனும், அனிரூத்தும் அடிக்கடி ஒருவரையொருவர் கேலி செய்துக்கொள்வதுண்டு, அதேசமயம் எந்த இடத்திலும் விட்டுத் தராமல் பாராட்டுவதும் உண்டு.

நிகழ்ச்சி ஒன்றில் விக்னேஷ்சிவன், அனிரூத் பங்கேற்றபோது, ‘நயன்தாராவை விக்னேஷ்சிவன் எப்போது மணக்கப்போகிறார்?’ என்று அனிரூத்திடம் ஒருவர் கேட்க அதற்கு பதில் அளித்த அனிரூத் ‘இன்னும் திருமணம் ஆகவில்லையா?’ என்று கேலி செய்தார்.

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்திற்கு அனிரூத் இசை அமைத்திருக்கிறார்.

இதன் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியானது. பாடல்களை கேட்டுவிட்டு நயன்தாரா அனிரூத்தை ஏகத்துக்கு புகழ்ந்து குறுஞ்செய்தி [மெசேஜ்] அனுப்பினார்.

இதையடுத்து அனிரூத்தும் நயன்தாராவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் நயன்தாரா ரொம்பவும் நல்லவர். எல்லோரிடமும் பிரியமாக இருப்பார். என்னுடைய இசை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

என் பாடல்களை கேட்டு பலமுறை  பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

நான் உங்களின் பெரிய ரசிகை என்று மெசேஜ் அனுப்புவார். சில சமயம் வகை வகையான உணவு தயாரித்து அனுப்பி வைப்பார்.

அவரது அன்பு எனக்கு மிகவும் பிடிக்கும்’ என அனிருத் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 784

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே தேவைப்படும் ஓவியா, ரசிகர்களை ஏமாற்றியது ஏன்?

பிரபல தொலைக்காட்சியில் நடிகர்  கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.

 

பட்டி தொட்டி எங்கும் களைகட்டிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகியான ஓவியா மூன்று படங்களில் நடித்துவருகிறார்.

 

அதேபோல் ரைசா, ஹரிஷ் ஆகியோர் இணைந்து ஒரு படத்திலும், ஜூலி இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இவற்றில் அனிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமும் படமாகின்றது.

 

இந்த நிலையில் பிக்பாஸ்- 2 நிகழ்ச்சி பிரபலங்களை போட்டியாளர்களாக கொண்டு நேற்று முன் தினம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முறையும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.

 

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கானவர்களின் உள்ளங்களை கவர்ந்த ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

 

அதேபோல் பிக் பாஸ் சீசன் 2 விலும் காலடி எடுத்து வைத்தார் ஓவியா.

 

எனினும் ஓவியா ரசிகர்களின் ஆசை நிராசையாகியாது.

 

ஓவ்வொரு நாளும் ஓவியாவை பார்த்து ரசிக்கலாம் என எண்ணிய ரசிகர்களுக்கு ஓவியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் என்பது மிகவும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

 

எது எவ்வாறாயினும் பிக் போஸ் வீட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அடிக்கடி ஓவியா சென்று வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 

ஏனெனில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த காலத்தில் ஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது. ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா தேவைப்படுகிறார். அதனால் தான் அவரை விருந்தாளியாக அழைத்துள்ளனர்.

Comment (0) Hits: 559

‘ராஜா ராணி ‘கார்த்திக்கின் ‘மன்னிப்பாயா’ குறுந்திரைப்படம்..!

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் நெடுந்தொடர் ‘ராஜா ராணி ‘ ஆகும்.

இந்த நெடுந்தொடரில் முன்னனி கதாப்பாத்திரங்களில் கார்த்திக்காக சஞ்சீவ் மற்றும் சென்பாவாக ஆல்யா மானசாவும் நடிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நெடுந்தொடர் பலராலும் கண்டு மகிழப்படும் நெடுந்தொடராக காணப்படுகின்றது.

இந்த நெடுந்தொடரின் கதாநாயகன் சஞ்சீவ் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்.

சினிமாவில் சாதிக்க ஆசை என கூறும் சஞ்சீவ் ஏழு படங்களில் நடித்தும் தனக்கான ஒரு இடம் கிடைக்கவில்லை என்பதால் நெடுந்தொடரில் கவனம் செலுத்துவோம் என  முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார்.

2 வருடங்களுக்கு முன்பாக ‘சரவணன் மீனாட்சி’ தேர்வில் கலந்துக்கொண்டும் வாய்ப்பு கிடைக்காத சஞ்சீவ்க்கு அதன் பின்பு ஒரு வருடம் கழித்து கிடைத்த வாய்ப்பு தான் ‘ராஜா ராணி’ நெடுந்தொடராகும்.

‘ராஜா ராணி’ நெடுந்தொடர் சஞ்சீவ்க்கு ஒரு திருப்பு முணையாக அமைந்ததென்றேக் கூற வேண்டும்.

இந்த வெற்றியின் அடுத்த கட்டமாக விரைவில் சஞ்சீவின் குறுந்திரைப்படம் ஒன்று வெளிவரவுள்ளது.

‘மன்னிப்பாயா’ எனும் பெயரில் வெளியிடப்படவுள்ள இந்த குறுந்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comment (0) Hits: 681

இளைய தளபதிக்கு இனி வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் - அபர்ணதி!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை’   நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசையோடு கலந்து கொண்டு, இறுதி கட்டம் வரை சென்றிருந்தவர் அபர்ணதி.

அவரது திருமண ஆசை அந்த நிகழ்ச்சியில் நிறைவேறவில்லை என்றாலும், அதில் கிடைத்த பிரபலத்தால் தற்பொழுது சினிமா துறையில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.

தற்பொழுது வசந்தபாலன் என்பவர் இயக்கும் திரைப்படத்தில், நடிகர் G.V. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜயின் தந்தை S.A சந்திர சேகர் நடிக்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில், நடிகர் விஜயை பற்றி அவர் தெரிவித்த கருத்து ஒன்று ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் இயல்புடைய அபர்ணதி, டிராஃபிக் ராமசாமி படத்தை பற்றி பேசும் போது, S.A சந்திர சேகர் அவர்கள் இந்த திரைப்படத்தில் அருமையாக நடித்திருப்பதாகவும், இந்த படத்தை பார்த்துவிட்டு வெளிவரும் மக்கள் கூட்டத்தினால் தமிழகத்தில் கண்டிப்பாக டிராஃபிக் ஏற்படும் என்றும் புகழ்ந்து பேசி இருந்தார்.

மேலும் S.A சந்திர சேகர் நடிக்க வந்துவிட்டதால், நடிகர் விஜய்க்கு இனி வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் என விளையாட்டாகவும் ஒரு வார்த்தையை விட்டிருந்தார்.என்றாலும் அதனை விஜயின் ரசிகர்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அபர்ணதியின் இந்த கருத்து குறித்து அவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Comment (0) Hits: 699

சினிமாவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு – நடிப்பாரா அனுஷ்கா ?

தற்பொழுது  பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

கீர்த்தி சுரேஸ், துல்கர் சர்மாவின் நடிப்பில் வெளிவந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையையும் சினிமாவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளிலும் தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக யாரை நடிக்க வைக்கலாம் என யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதாவின் சிறுவயது படங்களைக் கொண்டு அவரது உருவத்திற்கு ஏற்ற திறமையான நடிகைகளை தொடர்புகொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வகையில் ஜெயலலிதாவாக நடிப்பதற்கு அனுஷ்கா தான் பொருத்தமானவர் என கருதுகின்றனர்

எனினும் அனுஷ்கா தரப்பில் இதுவரையில் எந்தவித பதிலும் கூறப்படவில்லை.

இது முழுக்க சினிமாப் படமாக இல்லாமல்  bio-feature என்று சொல்லக்கூடிய வகையில் ஆவணத் தன்மையுடன் இருக்கும; என்றும் பலர் கூறுகின்றனர்.

Comment (0) Hits: 748

சிகாகோவில் டிடி செய்த காரியம்!

தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். அவர் எந்த நிகழ்ச்சி வந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும்.

அண்மையில் அவர் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி அனைவரிடமும் பாராட்டுக்கள் பெற்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட டிடி இப்போது சிகாகோ சென்றுள்ளார். அங்கு 103வது மாடியில் படித்தபடி பயங்கர போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் அவ்வளவு உயரத்தில் இப்படி ஒரு புகைப்படமா என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.

Comment (0) Hits: 586

தூத்துக்குடி மக்களின் அவலத்தை பிரதிபலிக்கும் மனிதமுண்டோ? ரப் பாடல் ..!

தற்போது மக்கள் அனைவரும் சுயநலம் என்ற ஒரு மாயப்போர்வையில்  இருந்து கொண்டிருக்கின்றார்கள்

தன்னுடைய இனம் அழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு தன்னுடைய அன்றாட  காரண காரியங்களில் லயித்துப்போயுள்ளனர்.

ஒரு இனத்தின் அழிவில் பெரும் பகுதியை சுயநலம் என்னும் கிருமிதான் உணவாக உட்கொண்டு வருகின்றது.

அன்று தொட்டு இன்றுவரை தமிழின அழிவிற்கும் இந்த சுயநலம் ஒன்றுதான் காரணமாக திகழ்கின்றது.

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் 13பேர் இறந்திருக்கின்ற நிலையிலும் கூட எம் மக்களின் நிலையை கண்டுகொள்ள யாரும் இங்கில்லையோ  என எண்ணத் தோன்தோன்றுகின்றது.

எத்தனையோ வருடங்கள் பழமைவாய்ந்த தமிழினத்தின் அழிவு சுயநலம் என்ற வெட்டில்பூச்சியால் தீர்மானிக்கப்பட வேண்டுமா ?

மனிதாபிமானம் என்ற ஒன்றை நாம் எங்கு தொலைத்தோம் ? போன்ற பல கேள்விகள் எம்மில் எழுகின்றன.

தூத்துக்குடியில் மக்களின் அவலத்துக்காக இலங்கையில் ரப் பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

மனித உள்ளங்களின் மனதை அறிந்துக்கொள்ளாதவர்களுக்கு இசையால் உணர்த்த சிறு முயற்சியே இந்த ரப் பாடல் ஆகும்.

இந்த பாடலை சான் சஞ்சீவ் இசையமைக்க எம்சிறா மற்றும் பிரேம் JR ஆகியோர் பாடியுள்ளனர்.

கீழுள்ள இணையத்தள முகவரியை க்ளிக் செய்வதன் மூலம் நீங்களும் இந்த பாடலை பார்க்க முடியும்.

https://youtu.be/A1aVkm6T1TU

Comment (0) Hits: 669

லெஸ்பியன் வாழ்க்கை வாழும்எமி ஜாக்சன் !

நடிகை எமி ஜாக்சன் அண்மையில் இன்ஸ்டகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

அதாவது அவர் லெஸ்பியன் வாழ்க்கை வாழ்வதாக ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் வெளியிட்டார். அதனை பார்த்ததில் இருந்து யார் அந்த பெண் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

 

எமி ஜாக்சன் வெளியிட்ட அந்த பெண்ணின் பெயர் நீலம் கில், 23 வயதான இவர் ஒரு மாடல் ஆவார்.

 

இவர் நிறைய பேஷன் ஷோக்களில் பங்குபெற்றுள்ளார். அதோடு நிறைய ஹாட் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களையும் திணற வைத்துள்ளார்.

Comment (0) Hits: 629

ஜி.வியுடன் ஜோடி சேரும் அபர்ணதி ..!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அபர்ணதி,  ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு  இன்று ஆரம்பமாகியுள்ளது.

எங்க வீட்டு மாப்பிள்ளை பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில்   ஒளிபரப்பாகிய ஒரு உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும்.

தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.

எனினும் இறுதிக் கட்டத்தில் நடிகர் ஆர்யா தனக்கேற்ற துணையைத் தெரிவு செய்யவில்லை.

இந்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான கோயம்புத்தூரைச் சேர்ந்த அபர்ணதி, மக்களின் மத்தியில் தனக்கான ஒரு தனி இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவர் தற்போது நடிகையாக அவதாரம் எடுக்க இருக்கிறார்  ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கைவசம் பல படங்களை வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக வசந்தபாலன் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு  இன்று ஆரம்பமாகியுள்ளது.

Comment (0) Hits: 1069

Page 1 of 3