V2025

சபாநாயகரின் இரட்டை வேடம் அம்பலம் - ரவியின் விசேட சலுகைகள் தொடர்பான அறிக்கைகளை முடக்கியமை வெளிச்சத்துக்கு

முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவின் சிறப்புரிமைகள் மீறப்பட்டமை தொடர்பாக அவரால் வெளியிடப்படவிருந்த அறிக்கையை சபாநாயகர் எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கியமை தெரியவந்துள்ளது.

குழப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி

சபாநாயகர் கருஜயசூரியவின் நடிவடிக்கையினால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்ப நிலை காணப்படுகின்றது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள், மேற்படி தன்னுடைய சிறப்புரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் ரவிகருணாநாயக்க ஜனவரி 24 ஆம் திகதி இந்த அறிக்கையை வெளியிடுவார் என உரிய முறையில் சபாநாயகருக்கு தெரியப்படுத்தியதாக அறிவித்தனர்.

சபாநாயகரின் நடவடிக்கைகளில் சந்தேகம்

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரின் இந்த நடவடிக்கைகள் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக தெரிவித்தார். அத்துடன் ரவி கருணாநாயக்கவால் இந்த அறிக்கையை வெளியிட முடியாது என்பதனை முதல்நாளே தெரிவித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், சபாநாயகர் பிணைமுறி அறிக்கையின் பிரதிகள் தான் அது. ஜனாதிபதியின் அலுவலகம், பாராளுமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிடமே வழங்கியதாக உறுதியளித்ததாக கூறப்பட்டது. ஆகவே தாம் பிரதியொன்றை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பெற்றுக்கொண்டதாக ரவி கருணாநாயக்க கூறியதை, சபாநாயகர் கேள்வி எழுப்பாதது சந்தேகங்களை விளைவிப்பதாக அவர் தெரிவித்தார்.

திட்டமிட்டு ஆபத்தில் தள்ளப்படும் ரவி

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைதுசெய்யப்படுவார் என்று திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டுவரும் நிலையில், சபாநாயகரின் இந்த நடவடிக்கையானது அந்த வதந்திகளுக்கு உதவுவது போன்று அமைந்துள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவித்திருந்தார்.

சபாநாயகரால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் பின்னணியில் மறைமுக கரமொன்று

இது பற்றிக் கருத்து வெளியிட்ட தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர், சபாநாயகரின் இந்த நடவடிக்கையின் பின்னர் மறைமுகமாக ஒரு சக்தி இயங்குவதாக சந்தேகம் வெளியிட்டார். இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களிடையே உள்ளக கூட்டமொன்று நடைபெற்றுவரும் நிலையில், இந்த நிலமை தொடர்பான முடிவானது இந்தக் கூட்டத்தொடரின் பின்னரே வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிடம் வினவியபோது அதற்கு பதிலளிக்க மறுப்புத் தெரிவித்த அவர், தணிக்கைiயின் பிரதிகள் சகல ஊடகங்களுக்கும் வழங்கப்படுவதுடன் இதன் ஒரு பகுதியானது Newstube.lk க்கும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ரவி கருணாநாயக்கவினால் 24 ஆம் திகதி கையளிக்கப்படவிருந்த அறிக்கையின் முழுவடிவம்,

கனம் சபாநாயகர் அவர்களே,

கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பனராகிய நான் இந்த அவையில் உரையாற்ற அனுமதி வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். கடந்த ஜனவர் 8 ஆம் திகதி ஒரு கனவு எங்கள் இதயங்களில் நிறைந்திருந்தது.

அது ஏற்கனவே தொலைந்து போயிருந்த நல்லிணக்கத்தையும் ஜனநாயத்தையும் மீள நிறுவும் நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவுவது ஆகும். அத்துடன் சமூக பொருளாதார வளர்ச்சியையும் அதனூடாக கட்டியெழுப்ப எத்தணித்திருந்தோம். இதற்காக புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ய முடிந்ததுடன் அதேவருடத்தில் நல்லாட்சி அரசாங்கத்தையும் தேர்தல் மூலம் நாம் பெற்றிருந்தோம்.

எனினும் அதிலிருந்து 3 வருட காலப்பகுதியில் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படும் போக்கினால் அந்த கனவுகளிலிருந்து விலகிச்செல்வதாக உணர முடிகின்றது. இன்று நான் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவனாக மட்டுமன்றி இந்த அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கான காரணங்களை அடைவதற்காக இறுதிவரை நின்று போராடும் ஒருவனாக இந்த அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

எனது நோக்கம் யாரையும் தாக்குவது அல்ல

சர்ச்சைக்குரிய பிணைமுறி வழக்கில் எனது பெயர் மற்றும் அந்தஸ்து பயன்படுத்தப்பட்மை போன்று வேறு எந்த ஒருவரதும் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது என்று நான் கருதுகின்றேன். ஆகவே நான் குற்றமற்றவன் என்பதனை இங்கு நிரூபிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த அறிக்கையின் மூலம் யாரையும் தாக்கிப் பேசுவது என்னுடைய நோக்கம் கிடையாது. அதற்குப் பதிலாக என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து நான் நிரபராதி என்பதனை நிரூபிப்பதற்கே நான் விரும்புகின்றேன்.

என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அவற்றை எதிர்கொள்வதற்கு நான் எப்போதும் தயாராகவே இருந்திருக்கின்றேன். இது உண்மையின் பலமாகும். இது நீதியின் பலமாகும். நான் நினைக்கின்றேன் நாடாளுமன்ற வரலாற்றில் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக முறையிடப்பட்டமை இதுவே முதற்தடவையாக இருக்கும். நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குபவன் என்ற ரீதியிலும் இந்த அரசாங்கம் அமைய வேண்டும் என்று பாடுபட்டவன் என்ற ரீதியிலும் என்மீது தற்போது பல்வேறுபட்ட அரசியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆணைக்குழு அறிக்கையை எதிர்பார்த்திருந்தேன்.

மேற்படி விசாரணையில் என்னுடைய பெயர் அடிபட ஆரம்பித்ததை தொடர்ந்தே இந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்காக நான் காத்திருந்தேன். சர்ச்சைக்குரிய பிணைமுறிகள் வழங்கப்பட்மை தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவானது அதிமேதகு ஜனாதிபதியினால் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அமைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தொடர்சிசயாக 10 மாதங்கள் விசாரணைகள் இடம்பெற்று இறுதி அறிக்கை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

  • ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையானது அவசர அவசரமாக சில மேலதிகாரிகளால் சில பக்கங்களாக புதுவருடத்தின்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை சுருக்குவதற்காக 3 நாட்களே எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத.
  • இந்த அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். என்னுடைய இந்த பேச்சானது ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை தொடர்பானதாகவே இருக்கும்.

ஜனாதிபதியின் அறிக்கை

ஜனாதிபதியின் அறிக்கையில் பின்வரும் விடயங்கள் கூறப்பட்டிருந்தன. அலோசியஸ் குடும்பத்திற்கு சொந்தமான வோல்டன் ரூ நிறுவனத்தின் வீடு ஒன்றை வாடகைப் பணம் செலுத்துதல் தொடர்பான பொறுப்புக்களுக்கு முன்னாள் நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உருப்பினராகிய ரவி கருணாநாயக்கவே பொறுப்புக்கூற வேண்டும்.

எனவே அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு சட்டமும் ஆணைக்குழுவுக்கு தவறான தகவலகளை வழங்கியதற்காக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது ஜனாதிபதியின் அறிக்கையில் எனக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் அதன்பின்னர் எங்களிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவ்வாறு ஏதாவது பிழைகள் நேர்ந்திருப்பின் மாத்திரம் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது.

இதுவொரு விநோதமான சம்பவம். இது எவ்வாறு இருக்கின்றதெனில் கிரிக்கெட் போட்டியின்போது துடுப்பாட்ட வீரர் ஒருவர் அகலப்பந்து என பந்தை விடும்போது அவர் ஆட்டமிழந்து விட்டதாக நடுவர் அறிவித்தது போன்று உள்ளது.

இதுபற்றி விளக்குவதற்கு அனுமதியுங்கள்

இந்த அறிக்கையை வாசித்த பின்னர் என்னால் உணர முடிந்தது யாதெனில் இந்த அறிக்கையின் பிரகாரம் என்னை சிக்கவைப்பதற்காக சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திறைநேரி பிணைமுறிகள் தொடர்பில் நிதியமைச்சர் என்ற வகையில் நானே அவற்றின் பரிமாற்றங்கள் தொடர்பாக அரச வங்கிகளுக்கு உத்தரவிட்டதாக சில அரசியல்வாதிகளும் சில ஊடக நிறுவனங்களும் திட்டமிட்ட முறையில் செய்தி வெளியிட்டுள்ளன.  இதன்மூலம் நான் அரசாங்கத்துக்கு பலத்த நட்டத்தை ஏற்படுத்திவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆணைக்குழு சொல்வது வேறு கதை

எனினும் ஆணைக்குழுவின் அறிக்கையில் இவ்விடயம் வேறுவிதமாக உள்ளது. ஆணைக்குழு அறிக்கையில் 838 ஆம் பக்கத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்தப் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது நாங்கள் முன்பு குறிப்பிட்டது போன்று அப்போது நிலவிய அதிக பாதகம் தரக்கூடிய வருமான விகிதத்தை அப்போதைய நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க பிணைமுறி ஏலத்தின்போது அந்த வருமான விகிதத்தை இறக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது நியாயமானதாகும். முன்னைய அரசாங்கமும் சில திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேசிய வங்கிகளான் தேசிய சேமிப்பு வங்கி மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியனவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.

இது அரசைப் பொறுத்தவரை தவறானதல்ல.  எனவே முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 3 வங்கிகளையும் அழைத்து இவ்வாறான திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளதனை சட்டவிரோதமாக நாம் கருத முடியாது.

அவர் மீது தவறு இல்லை

ஆகவே அந்த விகிதங்களைக் குறைப்பதற்கான உரிமை நிதியமைச்சருக்கு காணப்பட்டது. ஆகவே இது சட்டவிரோதமானதல்ல. ஆகவே இந்த விகிதங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க செய்த முயற்சிகள் நீதியானதாகும்.

அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்க, நானே மத்திய வங்கிக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக பல்வேறு தரப்பிலும் பெருமளவான பரப்புரை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் இந்த அறிக்கை அவ்வாறான கூற்றுக்களை நிராகரித்துள்ளது. மீண்டும் பக்கம் 838க்கு உங்களது கவனத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அந்தப் பக்கத்தில் இந்த 3 வங்கிகளுக்கும் அவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கிக்கு முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதற்கு எம்மால் உறுதியான சாட்சியொன்றைப் பெற முடியாதுள்ளது. அவ்வாறானதொரு சாட்சி இருக்கவில்லை.

அறிக்கையின்படி இந்தப் பரிவர்த்தகைளை மேற்கொள்வதற்கு நானோ எனது அமைச்சோ எவ்வித அறிவித்தல்களையும் வழங்கவில்லை என இவ் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிப்புக்குரிய சபாநாயகரே,

மேற்படி ஆணைக்குழுவின் அறிக்கையில் பிணைமுறி தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அறிஞர்களின் முடிவு

ஆணைக்குழுவின் அறிக்கையைப் படித்த பின்னர் எனது வழக்கறிஞர்கள் பின்வருவனவற்றை எனக்கு அறிவித்துள்ளனர். பிணைமுறிகளை வாங்குவதிலோ விற்பதிலா ஒருவருக்கு கிடைக்கக்கூடிய இலாபத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை மேற்படி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறிகளை விற்றதிலோ அதனை ஒருவர் வாங்கியதிலோ எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதனை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அவ்வாறான மத்திய வங்கியின் பிணைமுறிகள் தொடர்பான பரிவர்த்தனைகளில் எவ்விதமான குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவோ சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவோ எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதனை அவ் அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

மதிப்புக்குரிய சபாநாயகரே,

நான் தற்போது ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து என்னுடைய கவனத்தை செலுத்துகின்றேன். மேற்படி அறிக்கையின் அத்தியாயயம் 33 பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளது. பக்கங்கள் 921 மற்றும் 922, 30 பரிந்துரைகளைக் கொண்டுள்ளது. பரிந்துரைகள் 24 மற்றும் 25 இல் என்னுடைய பெயர் காணப்படுகின்றது. பரந்துரை 24 ஐ தற்போது பாருங்கள்.

24. அத்தியாயம் 24 இல் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று Perpetual Treasuries Ltd இன் துணை நிறுவனமும் Perpetual Treasuries Ltd நிறுவனத்தின் உரிமையாளர்களால் நிர்வகிக்கப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான Walt and Row Associates (Pvt) Ltd நிறுவனத்திடம் இருந்து தானும் தனது குடும்பமும் பயன்படுத்திய சொத்து ஒன்றிற்கான வாடகை தொடர்பில் தாம் நிதியமைச்சராய் இருந்த காலப்பகுதியில் நன்மைகளைக் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பெற்றாரா என்பது தொடர்பில் ஆணைக்குழு விசாரிக்க நாம் பரிந்துரைக்கின்றோம்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இலஞ்ச தடுப்பு சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர், ரவி கருணாநாயக்க மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானிக்கவும் பரிந்துரைக்கின்றோம்.

அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீங்களே முடிவுகளை எடுக்க வேண்டும்

அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கின்றது என்றால், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான ஆணைக்குழுவானது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்த காலப்பகுதியில் தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஏதேனும் இலாபங்களைப் பெற்றுள்ளாரா என்பது தொடர்பில் ஆராயவேண்டுமென்றும், அவ்வாறு அவர் பெற்றிருப்பின் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கையின் எந்த இடத்திலும் என்மீது வழக்கொன்று தொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

இதன்மூலம் எனக்கு எதிரான சதி தெளிவாக தெரிகின்றது. எனக்கெதிராக வழக்கு தொடுக்கப்படவேண்டும் என எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? இது மிகவும் திட்டமிடப்பட்ட அரசியல் சதி.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found