Exclusive

ஐ.தே.கவின் ஊடுருவலை வன்மையாக கண்டிக்கின்றோம்

நெருக்கடி ஏற்படும்போது கூட்டமைப்பின் ஆதரவை கோரும் ஐக்கிய தேசியக் கட்சி சந்தர்ப்பம் கிடைக்கும் போது தம்மை புறந்தள்ளி வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்ற முனையும் ஊடுருவல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விசனம் வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது, தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளைச் சிங்கள மயமாக்கும் நயவஞ்சக ஆக்கிரமிப்பு முயற்சியின் ஒரு பகுதியே என்றும் அவர் சாடியுள்ளார்.

வவுனியா நகரசபை ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடந்துகொண்ட முறையைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி வவுனியா நகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த போதிலும், அவை ஆட்சியமைப்பதற்குப் போதுமானதாக இருக்கவில்லை.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், வவுனியாவிலும் ஆதரவு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஐ.தே.கவின் ஆட்டிப்படைக்கும் நோக்கம்

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தங்களைவிடக் குறைந்த ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கி, ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் அவர்களை அமர்த்தியுள்ளது.

இந்த நடவடிக்கையானது, பெயரளவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரை அதிகாரத்தில் கொண்டு அவர்களைத் தங்கள் பெரும்பான்மை மூலம் ஆட்டிப்படைக்கும் உள்நோக்கம் கொண்டதென்றே நாம் நம்புகிறோம்.

கடந்த காலத்தில் வரவு - செலவுத் திட்டம், தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவை கூட்டு அரசுக்கு உறுதியாக வழங்கியிருந்தது.

இந்த  ஆதரவானது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வழங்கப்பட்டதல்ல. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பின் மூலம் சில சாதகமான வாய்ப்புக்களை உருவாக்க முடியுமென்ற அடிப்படையில் கூட்டு அரசின் உறுதித் தன்மையை சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டதாகும்.

அதே நோக்கத்துக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல விடயங்களில் அரசுக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்பதை நாம் மறுக்கவில்லை.

பலனை அனுபவிக்கிறோம்

அதன் காரணமாக, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

அதன் காரணமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணி ஈ.பி.டி.பி. மட்டுமின்றி ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பல ஆசனங்களை வெற்றிகொள்ள முடிந்தது.

அந்த வகையில், வவுனியா நகர சபையில் அதிக ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற போதிலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு அதிகாரத்தைப் பெறமுடியவில்லை.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டிய தார்மீகக் கடமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு. ஆனால் அவர்களோ பலவீனமான தமிழர் விடுதலைக் கூட்டணியை அதிகாரத்தில் அமர்த்தியதன் மூலம் நகரசபையின் ஆதிக்கத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குடியேற்றங்கள்

தமிழர் தாயகத்தின் எல்லைகளில் பல்வேறு சட்டபூர்வமான சட்டபூர்வமற்ற சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது, அதன் மூலம்  அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அந்த அதிகாரத்தைப் பாவித்து மேலும் குடியேற்றங்களை விரிவாக்குவது, இந்த வழிமுறைகள் மூலம் அந்தப் பிரதேசங்களை முழுமையாகச் சிங்களமயப்படுத்துவது என்பது இலங்கையின் ஆட்சியாளர்கள் காலங்காலமாகப் பின்பற்றி வரும் நயவஞ்சகமான தந்திரோபாயமாகும்.

அந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே, ஐக்கிய தேசியக் கட்சி வவுனியா நகர சபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தள்ளது. இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பியினர் ஆகியோரும் துணைபோகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பலமாக இருந்தே ஆதரவு பெற்றோம்

அப்படியானால், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனையோரின் ஆதரவைப் பெறவில்லையா என்ற கேள்வி எழுப்பப்படலாம்.

நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற்றோம். வேறு கட்சிகளின் ஆதரவையும் பெற்றோம். இதில் ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றமை தொடர்பாக எமக்குள் கருத்து முரண்பாடு உண்டு என்பதைச் சகலரும் அறிவார்கள். ஆனால் எவரின் ஆதரவைப் பெற்றபோதும் நாம் பலமான நிலையில் இருந்து கொண்டு எவரும் எம்மை வழி நடத்தமுடியாத நிலையிலேயே இருந்து கொண்டே அதிகாரங்களைக் கைப்பற்றினோம் என்பதே முக்கியமான விடயம்.

கந்தளாய், சேருவில, அம்பாறை, மணலாறு போன்ற பல பகுதிகள் மேற்கண்ட வழிமுறைகள் மூலம் சிங்கள மயப்படுத்தப்பட்டன. மேலும் சிங்களமயம் விரிவாக்கப்படுகின்றது என்பதை நாம் மறந்துவிட முடியாது. வவுனியா வடக்கின் நுழைவாயிலான வவுனியா மாவட்டத்தின் பிரதான நகரமாகும். இது சிங்களமயப்படுத்தப்படுவது எவ்வளவு பேராபத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

வவுனியா மக்கள் சிங்களமயமாக்கலுக்கு எதிராக விழிப்புடன் செயற்பட்டு வரக்கூடிய பேராபத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே சிங்கள அரசியல் அதிகாரிகள் சில சிங்களக் குடியேற்றங்கள், எல்லைக் கிராம ஆக்கிரமிப்புக்கள், இராணுவ முகாம்கள், பௌத்த விகாரைகள் என்பன மூலம் சிங்களமயப்படுத்தலுக்கான அத்திவாரம் அமைக்கப்பட்டது. நகரசபை மூலம் அவற்றை மேலும் முன்னெடுக்கும் ஆபத்து உண்டு.

தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் பேதங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இந்த விடயத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 802

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை; சுதந்திரக் கட்சிக்குள் பிளவு

கூட்டரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது தற்போது இரண்டு பகுதிகளாக பிரிந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசாங்கம் அமைக்கப்போவதாக வெளியான செய்தியால் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளது. 

கடந்த 13 ஆம் திகதி மாலை ஐக்கிய தேசியக் கட்சி, கட்சி ரீதியில் தனித்து ஆட்சியமைப்பது தொடர்பில் தீர்மானமொன்றை எட்டிய நிலையில், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் விளைவாக, அரசாங்கத்தின் எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு அதாவது தற்போதைய அரசியல் நிலைமைகளின் பின்னரான எதிர்கால அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆணைக்குழுவானது தீர்மானமொன்றுக்கு வரும்வரை நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வரும் உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயார்

எனினும் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்படி, தற்போதைய அரசாங்கத்தின் நிலையானது ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு தற்போதைய அரசியல் நிலைமை வித்திட்டுள்ளதுடன், அமைச்சர்கள் யாராவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ள விரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி 14 ஆம் திகதியான நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களிடையே ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 8 ஆம் திகதி வழங்கப்பட்ட ஆணையை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கட்சி உட்பட இந்த நாட்டு மக்களுக்கு ஜனவரி 8 ஆம் திகதி வழங்கிய ஆணையை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஒரு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, துமிந்த திஸநாயக்க, சரத் அமுனுகம, மகிந்தானந்த அளுத்கமமே, விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

தாமரை மொட்டை பரிந்துரைத்த திலங்க; மறுத்த சுசில்

மேற்படி குழுவானது தாம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது கட்டாயமானது எனவும் ஏனெனில் 6.2 மில்லியன் இலங்கையர்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு கட்டுப்படுவதாக அது அமையுமென்றும், மேலும் ஜனாதிபதியை அரசியல் ரீதியாக பாதுகாப்பதற்கு உதவும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இவர்கள் ராஜபக்சவுடன் இணைவது என்ற கருத்தை உறுதியாக எதிர்த்திருந்தனர். ஏனெனில் அவ்வாறு இணையும் பட்சத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கடும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தனர்.

எனினும் சுசில் பிரேம ஜயந்த தலைமையிலான மற்றுமொரு குழுவானது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய முடியாது என்றும் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என்றும் தெரிவித்திருந்தனர். மேலும் அவர்களது கட்சியின் கொள்கைக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சம்பவங்களின் பின்னராக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, ஐக்கிய தேசியக் கட்சியுடன் தனித்து ஆட்சியமைப்பதை விடுத்து ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான அறிக்கை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் 116 நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு என்ற நிலையையும் எட்ட முடியும் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நிலை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. எனினும் மகிந்த ஆதரவு பக்கத்திற்கு செல்வதை விட சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் இயங்குவது மரியாதைக்குரியது என அவர்கள் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருப்பது நல்லது என்றும் அவ்வாறு இருந்தால் உண்மையில் எதிர்க்கட்சியாக செயற்பட முடியும் என்றும் தெரிவித்தனர்.

இரு பகுதியினரதும் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையலாம் எனவும், ஏனையவர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கலாம் எனவும் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாகவும், ஏனைய 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 587

சிரசவின் ஊடக தர்மமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் செயற்பாடும்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட வேளை, பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான அர்ஜூன அலோசியஸ் மற்றும் அதன் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ஹசுன் பாலிசேன ஆகியோரின் கைது தொடர்பான செய்தியை நேரடியாக ஒளிபரப்பிய சிரச தொலைக்காட்சி நிறுவனம் எந்தளவிற்கு ஊடக தர்மத்தைப் பின்பற்றுகின்றது என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த செயற்பாடானது குற்றவியல் திணைக்களத்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியினால் பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது குற்றவியல் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குற்றவியல் சட்டங்களை மறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான அர்ஜூன அலோசியஸ் மற்றும் அதன் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ஹசுன் பாலிசேன ஆகியோர் சந்தேகநபர்கள் மாத்திரமே.

இவ்வாறான நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திலும் மேற்குறிப்பிடப்பட்ட நபர்களை சந்தேக நபர்களாக நீதிமன்றம் கருத வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த செயற்பாடுகளை அவதானிக்கும்போது கைதுசெய்யப்பட்ட நபர்கள் குற்றவாளிகளாக கருதப்படுகின்றார்களா அல்லது சந்தேக நபர்களாக கருதப்படுகின்றார்களா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

சந்தேக நபர்களைக் கைதுசெய்யுமாறு கோரப்படவில்லை

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிந்திருந்ததா என தெரியவில்லை.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கைதுசெய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதும் சந்தேக நபர்கள் தாமாக வந்து சரணடைவதற்கான கால அவகாசத்தை அவர்கள் வழங்கியிருக்கவில்லை.

எனினும் அவர்களைக் கைதுசெய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அங்கு சென்றபோது, சந்தேக நபர்களது வீட்டில் சிரச ஊடக நிறுவனத்தினர் கமராக்களுடன் நின்றிருந்ததுடன் அவர்களுக்கு முன்னால் இது ஒரு நாடகமாக அரங்கேற்றப்பட்டது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு பி அறிக்கையை வழங்கியபோது, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் வெளிநாட்டில் இருந்போதும், ஏனைய இருவரும் நாட்டிலேயே இருந்தார்கள். பொதுச் சொத்துக்களுக்கு எதிராக குற்றம் குற்றம் இழைத்தவர்களை கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பிடியாணை இன்றிய குற்றங்களுக்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்ய முடியும்.

மரியாதை மற்றும் கௌரவம்

எனினும் அவ்வாறான கைது மேற்கொள்ளப்படுமிடத்து சந்தேக நபரின் மரியாதை மற்றும் கௌரவம் ஆகியன பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.

கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும் பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு முன்னர் கைதுசெய்யப்படுவார்கள் என்று ஊடக நிறுவனங்கள் பல கருத்து வெளியிட்டிருந்த போதிலும், கடந்த வெள்ளிக்கிழமை பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் இந்த இரு சந்தேக நபர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சிக்கவில்லை.

எனவே அவர்களுக்கு உரிய அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் தாமாகவே சரணடைந்திருப்பார்கள். ஆகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவ்வாறு செய்வதற்கு தவறிவிட்டனர்.

தொலைக்காட்சி நாடகங்களைப் படம் பிடிப்பது போன்று சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் போது படம்பிடிப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி இல்லை.

எவ்வாறு சிரச ஊடகத்திற்கு இந்த விடயம் தெரிந்தது?

அர்ஜூன அலோசியஸ்க்கே இந்த கைது குறித்து முன்னறிவித்தல் எதுவும் விடுக்கப்படாத நிலையில் சிரச ஊடகத்திற்கு இந்த விடயம் எவ்வாறு தெரிந்தது என்று சந்தேகம் எழுந்துள்ளது. சிலர் இது அவர்களுடைய திறமை என்று கூறினாலும் கூட, இது ஊடக தர்மத்திற்கு முரணானதாகும்.  இந்த முன்னணி தொலைக்காட்சி நிறுவனமானது இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டமை அவர்களது பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகின்றது.

மேலும் குற்றவியல் சட்டத்தின் முக்கியமான கோவையானது எந்தவொரு சந்தேக நபரும் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை குற்றவாளி என்று குறிப்பிட முடியாது என்று கூறுகின்றது. நபரானவர் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் வரை, அவர் சந்தேகநபராகவே காணப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இது சட்டத்தின் முக்கிய அம்சமாக காணப்படுவதுடன் உலகின் அனைத்து நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சட்டங்களுக்கான விதிகள் என்ற பெயரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலங்களில் முன்னெடுத்துவரும் இந்த செயற்பாடு நல்லாட்சியின் அடிப்படையா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதியின் சுதந்திர தின உரைக்கு இது உந்துதலா?

சுதந்திர தின உரையின் இறுதியில் இந்தக் கைதுகள் குறித்து பேசிய ஜனாதிபதி நாட்டுப்பற்று என்பது நிதி கையாள்கையுடன் கூடிய ஒழுங்கான தன்மையைக் காட்டும் என்றார். ஆகவே இலங்கையின் வரலாற்றில் பாரிய நிதி மோசடியாக காணப்படும் இந்த தவறை விசாரிப்பதானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ அல்லது பலம்பொருந்திய அரசியல்வாதிகளையோ திருப்திப்படுத்தவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொண்டையா மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி கிரிபாவ ஆகியோரது வழக்குகளில் பொதுமக்கள் பொலிஸாரால் வழக்குகளில் இழுக்கப்பட்டதைப் பார்த்திருக்கின்றோம். இந்த சம்பவங்களும் மட்டமான ஊடக நிகழ்ச்சி நிரலினாலேயே இடம்பெற்றது. எனினும் இந்த பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் கிராம மட்ட பொலிஸாரால் நடத்தப்படவில்லை. இது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டிருந்தது. வித்தியா பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் இந்த அதிகாரிகள் மேற்கொண்ட சம்பவம் வரவேற்கத்தக்கதாக அமைந்த அதேவேளை இதுபோன்ற சம்பவம் அவர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக நகர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதுடன் தொலைக்காட்சி ஒன்றின் ஊடான நேரடி ஒளிபரப்பின் மூலம் இந்த சம்பவம் தொடர்பான சாட்சியங்களையும் நாட்டிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன் இறுதி முடிவு என்னவெனில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்படுவர். எனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உண்மையான நோக்கம் நீதியை நிலை நாட்டுவது என்றால் அரசியல்வாதிகளிடம் சோரம் போகாது இந்த சம்பவம் போன்ற ஊடக நாடகங்களை நிகழ்த்தக் கூடாது.

 

 

Comment (0) Hits: 930

பிணைமுறி வழங்கியதனால் 25 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டிய அரச நிறுவனங்கள்; அலோசியசிற்காக வாதாடும் வழக்கறிஞர்கள்

சர்ச்சைக்குரிய பிணைமுறி வழங்கலினால் அரசுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் நிலையில், அவருக்காக போராடும் வழக்கறிஞர்கள் அக்குற்றச்சாட்டுக்களைப் பொய் என்று மறுத்ததுடன் சில ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

உண்மையை வெளியிடத் தயார்

சமூக வலைத்தளங்களில் அர்ஜூன் அலோசியஸ் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவிருப்பதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக அவரது வழக்கறிஞரிடம் வினவியபோதே Tamil.Newstube.lk க்கு அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இதன் பின்னால் பல்வேறு கரங்கள் செயற்பட்டுள்ளன

வழக்கறிஞர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், பல்வேறு அரசியல் மேடைகளில் பிணைமுறி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளபோதும், தங்களுடைய தரப்பாகிய அர்ஜூன் அலோசியஸ் மௌனமாக இருக்கத் தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மௌனமாக இருந்த அர்ஜூன அலோசியஸின் வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும் முடக்குவதற்கு தற்போது முயற்சி இடம்பெற்று வருவதனால், தற்போது அவர் சர்ச்சைக்குரிய பிணைமுறி வழங்குதல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் சகலருக்கும் வெளிப்படுத்த முன்வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

170 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம்

பிணைமுறி வழங்குதல் தொடர்பான கணக்கு வழக்குகளின்போது அர்ஜூன அலோசியஸ் தொடர்புபட்டுள்ளதாகவும், அதற்கமைய அரச நிதிநிறுவனங்கள் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரங்களில் தொடர்புபட்ட நிதி நிறுவனங்கள் 25 பில்லியன் ரூபா நிதியை இலாபமாக பெற்றதாக தெரிவித்தனர்.

அத்துடன் பிணைமுறி பரிவர்த்தனையில் ஈடுபட்ட 3 அரச நிறுவனங்களினதும் இலாபம் பற்றிய அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி அவர்கள் கருத்து தெரிவித்தனர். அதன்படி தொழிலாளர் சேமலாப நிதியம் 21.5 பில்லியன் ரூபாவையும் தேசிய காப்புறுதி கூட்டுத்தாபனம் 2.9 பில்லியன் ரூபாவையும் தேசிய சேமிப்பு வங்கி 1.2 பில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் பல்வேறு இடங்களில் இந்தப் பிணைமுறி வழங்கலில் அரசாங்கத்துக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அது பேச்சளவிலானதே என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை தெரியாமல் பிரச்சனை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது

இரண்டாம் சந்தையிலிருந்து இந்தப் பிணைமுறிகளை அரசாங்க நிதியைப் பயன்படுத்தி வாங்கும்போது நஷ்டங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும், அந்தப் பிணைமுறிகளை விற்று அதில் வரும் இலாபத்திலிருந்து தொழில் வாய்ப்புக்களை உருவாக்க தீர்மானித்ததாக தெரிவித்தனர்.

பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பாகவோ பிரதான முகவர்கள் இரண்டாந்தர சந்தைகள் பற்றிய அறிவு இல்லாத பொதுமக்களை அரசியல் இலாபங்களுக்காக சிலர் திசைதிருப்புவதாகவும் அது துரதிஸ்டவசமானது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Comment (0) Hits: 570

சபாநாயகரின் இரட்டை வேடம் அம்பலம் - ரவியின் விசேட சலுகைகள் தொடர்பான அறிக்கைகளை முடக்கியமை வெளிச்சத்துக்கு

முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவின் சிறப்புரிமைகள் மீறப்பட்டமை தொடர்பாக அவரால் வெளியிடப்படவிருந்த அறிக்கையை சபாநாயகர் எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கியமை தெரியவந்துள்ளது.

குழப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி

சபாநாயகர் கருஜயசூரியவின் நடிவடிக்கையினால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்ப நிலை காணப்படுகின்றது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள், மேற்படி தன்னுடைய சிறப்புரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் ரவிகருணாநாயக்க ஜனவரி 24 ஆம் திகதி இந்த அறிக்கையை வெளியிடுவார் என உரிய முறையில் சபாநாயகருக்கு தெரியப்படுத்தியதாக அறிவித்தனர்.

சபாநாயகரின் நடவடிக்கைகளில் சந்தேகம்

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரின் இந்த நடவடிக்கைகள் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக தெரிவித்தார். அத்துடன் ரவி கருணாநாயக்கவால் இந்த அறிக்கையை வெளியிட முடியாது என்பதனை முதல்நாளே தெரிவித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், சபாநாயகர் பிணைமுறி அறிக்கையின் பிரதிகள் தான் அது. ஜனாதிபதியின் அலுவலகம், பாராளுமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிடமே வழங்கியதாக உறுதியளித்ததாக கூறப்பட்டது. ஆகவே தாம் பிரதியொன்றை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பெற்றுக்கொண்டதாக ரவி கருணாநாயக்க கூறியதை, சபாநாயகர் கேள்வி எழுப்பாதது சந்தேகங்களை விளைவிப்பதாக அவர் தெரிவித்தார்.

திட்டமிட்டு ஆபத்தில் தள்ளப்படும் ரவி

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைதுசெய்யப்படுவார் என்று திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டுவரும் நிலையில், சபாநாயகரின் இந்த நடவடிக்கையானது அந்த வதந்திகளுக்கு உதவுவது போன்று அமைந்துள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவித்திருந்தார்.

சபாநாயகரால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் பின்னணியில் மறைமுக கரமொன்று

இது பற்றிக் கருத்து வெளியிட்ட தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர், சபாநாயகரின் இந்த நடவடிக்கையின் பின்னர் மறைமுகமாக ஒரு சக்தி இயங்குவதாக சந்தேகம் வெளியிட்டார். இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களிடையே உள்ளக கூட்டமொன்று நடைபெற்றுவரும் நிலையில், இந்த நிலமை தொடர்பான முடிவானது இந்தக் கூட்டத்தொடரின் பின்னரே வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிடம் வினவியபோது அதற்கு பதிலளிக்க மறுப்புத் தெரிவித்த அவர், தணிக்கைiயின் பிரதிகள் சகல ஊடகங்களுக்கும் வழங்கப்படுவதுடன் இதன் ஒரு பகுதியானது Newstube.lk க்கும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ரவி கருணாநாயக்கவினால் 24 ஆம் திகதி கையளிக்கப்படவிருந்த அறிக்கையின் முழுவடிவம்,

கனம் சபாநாயகர் அவர்களே,

கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பனராகிய நான் இந்த அவையில் உரையாற்ற அனுமதி வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். கடந்த ஜனவர் 8 ஆம் திகதி ஒரு கனவு எங்கள் இதயங்களில் நிறைந்திருந்தது.

அது ஏற்கனவே தொலைந்து போயிருந்த நல்லிணக்கத்தையும் ஜனநாயத்தையும் மீள நிறுவும் நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவுவது ஆகும். அத்துடன் சமூக பொருளாதார வளர்ச்சியையும் அதனூடாக கட்டியெழுப்ப எத்தணித்திருந்தோம். இதற்காக புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ய முடிந்ததுடன் அதேவருடத்தில் நல்லாட்சி அரசாங்கத்தையும் தேர்தல் மூலம் நாம் பெற்றிருந்தோம்.

எனினும் அதிலிருந்து 3 வருட காலப்பகுதியில் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படும் போக்கினால் அந்த கனவுகளிலிருந்து விலகிச்செல்வதாக உணர முடிகின்றது. இன்று நான் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவனாக மட்டுமன்றி இந்த அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கான காரணங்களை அடைவதற்காக இறுதிவரை நின்று போராடும் ஒருவனாக இந்த அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

எனது நோக்கம் யாரையும் தாக்குவது அல்ல

சர்ச்சைக்குரிய பிணைமுறி வழக்கில் எனது பெயர் மற்றும் அந்தஸ்து பயன்படுத்தப்பட்மை போன்று வேறு எந்த ஒருவரதும் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது என்று நான் கருதுகின்றேன். ஆகவே நான் குற்றமற்றவன் என்பதனை இங்கு நிரூபிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த அறிக்கையின் மூலம் யாரையும் தாக்கிப் பேசுவது என்னுடைய நோக்கம் கிடையாது. அதற்குப் பதிலாக என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து நான் நிரபராதி என்பதனை நிரூபிப்பதற்கே நான் விரும்புகின்றேன்.

என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அவற்றை எதிர்கொள்வதற்கு நான் எப்போதும் தயாராகவே இருந்திருக்கின்றேன். இது உண்மையின் பலமாகும். இது நீதியின் பலமாகும். நான் நினைக்கின்றேன் நாடாளுமன்ற வரலாற்றில் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக முறையிடப்பட்டமை இதுவே முதற்தடவையாக இருக்கும். நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குபவன் என்ற ரீதியிலும் இந்த அரசாங்கம் அமைய வேண்டும் என்று பாடுபட்டவன் என்ற ரீதியிலும் என்மீது தற்போது பல்வேறுபட்ட அரசியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆணைக்குழு அறிக்கையை எதிர்பார்த்திருந்தேன்.

மேற்படி விசாரணையில் என்னுடைய பெயர் அடிபட ஆரம்பித்ததை தொடர்ந்தே இந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்காக நான் காத்திருந்தேன். சர்ச்சைக்குரிய பிணைமுறிகள் வழங்கப்பட்மை தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவானது அதிமேதகு ஜனாதிபதியினால் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அமைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தொடர்சிசயாக 10 மாதங்கள் விசாரணைகள் இடம்பெற்று இறுதி அறிக்கை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

  • ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையானது அவசர அவசரமாக சில மேலதிகாரிகளால் சில பக்கங்களாக புதுவருடத்தின்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை சுருக்குவதற்காக 3 நாட்களே எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத.
  • இந்த அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். என்னுடைய இந்த பேச்சானது ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை தொடர்பானதாகவே இருக்கும்.

ஜனாதிபதியின் அறிக்கை

ஜனாதிபதியின் அறிக்கையில் பின்வரும் விடயங்கள் கூறப்பட்டிருந்தன. அலோசியஸ் குடும்பத்திற்கு சொந்தமான வோல்டன் ரூ நிறுவனத்தின் வீடு ஒன்றை வாடகைப் பணம் செலுத்துதல் தொடர்பான பொறுப்புக்களுக்கு முன்னாள் நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உருப்பினராகிய ரவி கருணாநாயக்கவே பொறுப்புக்கூற வேண்டும்.

எனவே அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு சட்டமும் ஆணைக்குழுவுக்கு தவறான தகவலகளை வழங்கியதற்காக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது ஜனாதிபதியின் அறிக்கையில் எனக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் அதன்பின்னர் எங்களிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவ்வாறு ஏதாவது பிழைகள் நேர்ந்திருப்பின் மாத்திரம் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது.

இதுவொரு விநோதமான சம்பவம். இது எவ்வாறு இருக்கின்றதெனில் கிரிக்கெட் போட்டியின்போது துடுப்பாட்ட வீரர் ஒருவர் அகலப்பந்து என பந்தை விடும்போது அவர் ஆட்டமிழந்து விட்டதாக நடுவர் அறிவித்தது போன்று உள்ளது.

இதுபற்றி விளக்குவதற்கு அனுமதியுங்கள்

இந்த அறிக்கையை வாசித்த பின்னர் என்னால் உணர முடிந்தது யாதெனில் இந்த அறிக்கையின் பிரகாரம் என்னை சிக்கவைப்பதற்காக சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திறைநேரி பிணைமுறிகள் தொடர்பில் நிதியமைச்சர் என்ற வகையில் நானே அவற்றின் பரிமாற்றங்கள் தொடர்பாக அரச வங்கிகளுக்கு உத்தரவிட்டதாக சில அரசியல்வாதிகளும் சில ஊடக நிறுவனங்களும் திட்டமிட்ட முறையில் செய்தி வெளியிட்டுள்ளன.  இதன்மூலம் நான் அரசாங்கத்துக்கு பலத்த நட்டத்தை ஏற்படுத்திவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆணைக்குழு சொல்வது வேறு கதை

எனினும் ஆணைக்குழுவின் அறிக்கையில் இவ்விடயம் வேறுவிதமாக உள்ளது. ஆணைக்குழு அறிக்கையில் 838 ஆம் பக்கத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்தப் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது நாங்கள் முன்பு குறிப்பிட்டது போன்று அப்போது நிலவிய அதிக பாதகம் தரக்கூடிய வருமான விகிதத்தை அப்போதைய நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க பிணைமுறி ஏலத்தின்போது அந்த வருமான விகிதத்தை இறக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது நியாயமானதாகும். முன்னைய அரசாங்கமும் சில திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேசிய வங்கிகளான் தேசிய சேமிப்பு வங்கி மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியனவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.

இது அரசைப் பொறுத்தவரை தவறானதல்ல.  எனவே முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 3 வங்கிகளையும் அழைத்து இவ்வாறான திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளதனை சட்டவிரோதமாக நாம் கருத முடியாது.

அவர் மீது தவறு இல்லை

ஆகவே அந்த விகிதங்களைக் குறைப்பதற்கான உரிமை நிதியமைச்சருக்கு காணப்பட்டது. ஆகவே இது சட்டவிரோதமானதல்ல. ஆகவே இந்த விகிதங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க செய்த முயற்சிகள் நீதியானதாகும்.

அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்க, நானே மத்திய வங்கிக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக பல்வேறு தரப்பிலும் பெருமளவான பரப்புரை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் இந்த அறிக்கை அவ்வாறான கூற்றுக்களை நிராகரித்துள்ளது. மீண்டும் பக்கம் 838க்கு உங்களது கவனத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அந்தப் பக்கத்தில் இந்த 3 வங்கிகளுக்கும் அவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கிக்கு முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதற்கு எம்மால் உறுதியான சாட்சியொன்றைப் பெற முடியாதுள்ளது. அவ்வாறானதொரு சாட்சி இருக்கவில்லை.

அறிக்கையின்படி இந்தப் பரிவர்த்தகைளை மேற்கொள்வதற்கு நானோ எனது அமைச்சோ எவ்வித அறிவித்தல்களையும் வழங்கவில்லை என இவ் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிப்புக்குரிய சபாநாயகரே,

மேற்படி ஆணைக்குழுவின் அறிக்கையில் பிணைமுறி தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அறிஞர்களின் முடிவு

ஆணைக்குழுவின் அறிக்கையைப் படித்த பின்னர் எனது வழக்கறிஞர்கள் பின்வருவனவற்றை எனக்கு அறிவித்துள்ளனர். பிணைமுறிகளை வாங்குவதிலோ விற்பதிலா ஒருவருக்கு கிடைக்கக்கூடிய இலாபத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை மேற்படி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறிகளை விற்றதிலோ அதனை ஒருவர் வாங்கியதிலோ எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதனை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அவ்வாறான மத்திய வங்கியின் பிணைமுறிகள் தொடர்பான பரிவர்த்தனைகளில் எவ்விதமான குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவோ சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவோ எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதனை அவ் அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

மதிப்புக்குரிய சபாநாயகரே,

நான் தற்போது ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து என்னுடைய கவனத்தை செலுத்துகின்றேன். மேற்படி அறிக்கையின் அத்தியாயயம் 33 பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளது. பக்கங்கள் 921 மற்றும் 922, 30 பரிந்துரைகளைக் கொண்டுள்ளது. பரிந்துரைகள் 24 மற்றும் 25 இல் என்னுடைய பெயர் காணப்படுகின்றது. பரந்துரை 24 ஐ தற்போது பாருங்கள்.

24. அத்தியாயம் 24 இல் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று Perpetual Treasuries Ltd இன் துணை நிறுவனமும் Perpetual Treasuries Ltd நிறுவனத்தின் உரிமையாளர்களால் நிர்வகிக்கப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான Walt and Row Associates (Pvt) Ltd நிறுவனத்திடம் இருந்து தானும் தனது குடும்பமும் பயன்படுத்திய சொத்து ஒன்றிற்கான வாடகை தொடர்பில் தாம் நிதியமைச்சராய் இருந்த காலப்பகுதியில் நன்மைகளைக் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பெற்றாரா என்பது தொடர்பில் ஆணைக்குழு விசாரிக்க நாம் பரிந்துரைக்கின்றோம்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இலஞ்ச தடுப்பு சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர், ரவி கருணாநாயக்க மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானிக்கவும் பரிந்துரைக்கின்றோம்.

அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீங்களே முடிவுகளை எடுக்க வேண்டும்

அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கின்றது என்றால், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான ஆணைக்குழுவானது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்த காலப்பகுதியில் தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஏதேனும் இலாபங்களைப் பெற்றுள்ளாரா என்பது தொடர்பில் ஆராயவேண்டுமென்றும், அவ்வாறு அவர் பெற்றிருப்பின் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கையின் எந்த இடத்திலும் என்மீது வழக்கொன்று தொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

இதன்மூலம் எனக்கு எதிரான சதி தெளிவாக தெரிகின்றது. எனக்கெதிராக வழக்கு தொடுக்கப்படவேண்டும் என எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? இது மிகவும் திட்டமிடப்பட்ட அரசியல் சதி.

Comment (0) Hits: 557

பிணைமுறி மோசடி அறிக்கையைக் காட்டி அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி - உளவுத்துறை தகவல்

பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையைக் காட்டி அரசைக் கவிழ்ப்பதற்கான முயற்சியொன்று இடம்பெற்றுவருவதாக , உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை விபரங்கள் வெளிவரத்தொடங்கியதும் நல்லாட்சி அரசாங்கத்தைப் படிப்படியாக கவிழ்க்கும் முயற்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரவி கருணாநாயக்க - முதலில் பாதிக்கப்பட்டவர்

இந்த சூழ்ச்சியின் முதல் அங்கமாக நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளான  ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியிடையே பிளவொன்றை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவே பிணைமுறி மோசடிக்கு முழுப்பொறுப்பானவர் என்ற செய்தியானது ஊடகங்கள் மூலம் பரவலாக பரப்பப்பட்டது.

பிரதமருக்கு எதிராக ஊடங்கங்கள்

இந்தச் சதியின் முக்கிய இலக்காக பிரதமர் ரணில் காணப்பட்ட போதிலும், தற்போது ரவியை சூழ்ச்சியாளர்கள் குறிவைத்துள்ளதாக தெரிகின்றது. அடுத்த நிதியமைச்சராக ரணில் தெரிவாகும் பட்சத்தில், ஊடங்கங்களின் உதவியுடன் அவரைத் தாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரணில் - மைத்திரி இடையே விரிசலை ஏற்படுத்த முயற்சி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதிக்கு எதிராக திருப்பி அவர்களிடையே விரிசலை ஏற்படுத்த சூழ்ச்சியாளர்கள் முயற்சித்துள்ளதாக தெரிகின்றது. பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கையை அழித்தலே அவர்கள் பின்னிய சதியின் இறுதிக்கட்டம் என தெரிகின்றது.

இது தொடர்பான எழுத்துமூல ஆவணங்கள் எமக்கு கிடைத்துள்ளதுடன் அந்த சதி தொடர்பான Newstube.lk  இன் விவரணம் கீழே,

அவசர அறிக்கையை வெளியிடுவதற்கு யார் தூண்டினார்கள்?

பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி கையளிக்கப்பட்டது. அது தொடர்பாக ஜனாதிபதி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட போதும், அந்த அறிவிப்பு ஜனவரி 3 ஆம் திகதியே வெளியானது.

இதனைத் தொடர்ந்து பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மோசடி, ஊழல் பற்றி விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் 34 இடைக்கால அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அரசியல்வாதிகளும் மக்களும் கருத்து வெளியிட்டனர்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேற்படி அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதியின் செயலருக்கு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

மேற்படி வேண்டுகோளுக்கு பதிலளித்த செயலாளர் , ஜனவரி மாதம் 17 ஆம் திகதி மேற்படி அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி அறிக்கைகள் 17 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

அதேவேளை பிணைமுறி அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் சட்டமா அதிபரிடமும் மத்திய வங்கியிடமும் கையளிக்கப்பட்டு விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதேவேளை அவ்வறிக்கையின் பிரதியொன்றை தாம் பெற்றுள்ளதாகவும் அதன் பிரகாரம் தான் பிணைமுறி வழக்கில் குற்றம் சாட்டப்படவில்லை என அறிந்ததாயும் முன்னாள் நிதியமைச்சர் ரவி தெரிவித்தார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் குழப்ப முயற்சி

எனினும் பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்களை நாடாளுமன்றத்தில அறிவிப்பதாக இருந்த தினத்திலும் அதன் பின்னரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் குழப்புவதற்கு முயற்சி இடம்பெறுவதாக, உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. இதே தகவலை சபாநாயகர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது.

உளவுத்துறையின் அறிக்கையில் பிணைமுறி அறிக்கையின் பிரகாரம் அரசைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக கூறப்பட்ட அதேவேளை, நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் குழப்ப ஏற்படுத்தப்பட்ட முயற்சிக்கும் அரசுக் கவிழ்ப்பு முயற்சிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன் மூலம் மேற்படி அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை நிறுத்துவதற்கு சதிகாரர்கள் முயற்சித்தனர்.

ஜனாதிபதியின் விசேட அறிக்கையை பயன்படுத்திய சதிகாரர்கள்

இதுகுறித்து விசாரணை நடத்திய உளவுத்துறை, பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் ஜனாதிபதியின் அறிக்கைக்கும் பாரிய முரண்பாடுகள் இருப்பதை அவதானித்தனர். இதன் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு இம்மோசடி பற்றிய தொடர்பு பற்றியும், அறிக்கையில் அவரை பற்றிய கருத்துக்கள் குறித்தும் உள்ள பகுதியில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதை உளவுத்துறை கண்டுபிடித்தது.

ஜனாதிபதியின் அறிக்கையை வேண்டுமென்றே உருக்குலைத்தவர் யார்?

ரவி கருணாநாயகே பற்றிய ஜனாதிபதி அறிக்கையின் தமிழாக்கம் ஆனது இவ்வாறு இருக்க வேண்டும்,

அலோசியஸ் குடும்பத்திற்கு சொந்தமான Walt and Row நிறுவனத்தின் வீடு ஒன்றிக்கான வாடகைப்பணத்திற்கான முன்னாள் நிதியமைச்சர் ரவியின் பொறுப்பு பற்றி அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவிற்கு பொய்யான தகவல்களை வழங்கியமைக்காகவும், ஊழல் தடுப்புச்சட்டத்திலும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பபட்ட அறிக்கையில் இது இவ்வாறு காணப்பட்டது.

ஆணைக்குழுவின் அறிக்கையின் உருக்குலைக்கப்படாத தமிழாக்கம் பின்வருமாறு அமையும், 

24. அத்தியாயம் 24 இல் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று Perpetual Treasuries Ltd இன் துணை நிறுவனமும் Perpetual Treasuries Ltd நிறுவனத்தின் உரிமையாளர்களால் நிர்வகிக்கப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான Walt and Row Associates (Pvt) Ltd நிறுவனத்திடம் இருந்து தானும் தனது குடும்பமும் பயன்படுத்திய சொத்து ஒன்றிற்கான வாடகை தொடர்பில் தாம் நிதியமைச்சராய் இருந்த காலப்பகுதியில் நன்மைகளைக் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பெற்றாரா என்பது தொடர்பில் ஆணைக்குழு விசாரிக்க நாம் பரிந்துரைக்கின்றோம்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இலஞ்ச தடுப்பு சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர், ரவி கருணாநாயக்க மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானிக்கவும் பரிந்துரைக்கின்றோம்.

25. அத்தியாயம் 24இல் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயகக்க ஆணைக்குழுவிற்கு வழங்கிய சில தகவல்கள் தவறாக இருந்ததால், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் பகுதி 179 அல்லது 188 அல்லது விசாரணை ஆணைக்குழு சட்டம் 1948 இலக்கம் 17 பகுதி 9 இதன் பிரகாரம் வழக்குத் தொடர வேண்டுமா என ஆராய;வதற்கு சட்டமா அதிபர் மற்றும் பொருத்தமான அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கின்றோம்.

Comment (0) Hits: 471