V2025

தளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள்...!

தளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

 

நாளைய தீர்ப்பால் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்டு மக்களின் மனதை கொள்ளை கொண்ட தளபதியாக திகழ்பவர் விஜய் .

இவர் இன்று  தனது  44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்காக பிரபலங்கள் பலர் வாழ்த்து சொல்லி மகிழ்ந்து வருகின்றனர்.

நடிகர் விஜய் என்ற ஒற்றைப் பெயர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளது.

ரசிகர்களால் தளபதி எனத் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜய் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் திருவிழா போலக் காட்சியளிக்கும்.

தமிழகம் முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் எனப் பல ஏற்பாடுகளை ரசிகள் செய்வது வழக்கம். அதிலும், எல்லா ஆண்டும் மக்களுக்கான நலத்திட்டத்தைச் செயல்படுத்துவதை ரசிகர்கள் கடமையாக கொண்டுள்ளனர். 

 

எனினும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான நிலையில் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தமிழ் சினிமா ஆரம்ப காலம் முதலே இரண்டு திரை ஆளுமைகளை மையப்படுத்தியே நகர்ந்து வந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி-கமல், என்று தொடர்ந்த பாரம்பரியம் தற்போது விஜய்-அஜித் என்ற பாத்திரங்களுக்கு இடையே வந்து நிற்கிறது.

 

அடுத்த தலைமுறைக்கான இரண்டு முக்கிய நடிகர்கள் யார் என்ற தேடலை சினிமா ரசிகர்கள் இன்னும் தொடங்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு விஜய்யும், அஜித்தும் திரைத்துறையை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.

 

அதிலும் 44 வயதைக் கடந்திருக்கும் விஜய் இளமை மாறாத தோற்றத்தோடும், துடிப்போடும் இன்றும் நடித்து வருகிறார்.

 

 

விஜய்  தொடக்கத்தில்  தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

 

இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை " தளபதி" என்று அழைக்கிறார்கள்.

 

 

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்

 • காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது
 • திருப்பாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)
 • விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள்
 • நாளைய சூப்பர் ஸ்டார் - திருப்பாச்சி, சிவகாசி-2006
விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள் 
 • இந்த ஆண்டின் கேளிக்கையாளர்-போக்கிரி, அழகிய தமிழ் மகன் -2007
 • விருப்பமான நாயகன்-வேட்டைக்காரன்-2009
 • இந்த ஆண்டின் கேளிக்கையாளர்-நண்பன்,துப்பாக்கி-2012
 • விருப்பமான நாயகன்-துப்பாக்கி-2012

 

பிற விருதுகள்

 • கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
 • கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
 • கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
 • பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது
 • போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
 • போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
 • வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
 • துப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருது 

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த திரைப்படத்தின் போஸ்டரும், அதன் தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.  ‘சர்கார்' என பெயரிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டரில், விஜயின் ஸ்டைலிஷான லுக் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்திருக்கிறது.

 

ஒரு புறம் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகளும் பஞ்சமில்லாமல் வந்து கொண்டிருக்கின்றன.

 

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்கார் திரைப்படம் அதற்கான பதிலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
 • No comments found