பொழுதுபோக்கு

CBI அதிகாரியாக நயன்தாரா!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா CBI அதிகாரியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜெ.ஜெயக்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், ராஷி கன்னா, தேவன், ரமேஷ் திலக், பேபி மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கௌரவ தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

 

பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியை ஏற்றுள்ளார்.

 

 
இந்த படத்தில் நயன்தாரா, அஞ்சலி விக்ரமாதித்யன் என்ற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இவர்களது குழந்தையாக பேபி மானசி நடித்துள்ளார்.
 
 
இந்த கதாபாத்திரத்திற்காக தலைமுடியைக் குறைக்க சம்மதித்தாராம்.

 

அவரது CBI அதிகாரி தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வௌியான அனைத்து படங்களுமே அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இருந்தன.

 

இந்தப் படமும் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்கின்றனர்.

Comment (0) Hits: 493

அம்மனாக பிக் பாஸ்' புகழ் ஜூலி!

அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி' என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது.

 

இந்த படத்தில், `பிக் பாஸ்' புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

 

புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார்கள், மகேஸ்வரன்-சந்திரஹாசன்.

 
`அம்மன் தாயி' படத்தை பற்றி டைரக்டர்கள் மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆகிய இருவரும் கூறியதாவது:-
 
``அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார்? என்பதே கதை. கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார்? என்பதை படத்தில் ஒரு முக்கிய காட்சியாக வைத்து இருக்கிறோம்.
 
 
படத்தின் கதாநாயகி ஜூலி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், முதலில் இந்த படத்தில் நடிக்க தயங்கினார். ``நான் அம்மன் வேடத்துக்கு பொருந்துவேனா?'' என்று யோசித்தார். அம்மன் வேடத்தில் அவரை போட்டோ எடுத்து காட்டியபோது, ஆச்சரியப்பட்டார். அவர் அம்மன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் பொருந்தியிருந்தார். இந்து பெண்ணாகவே மாறி, விரதம் இருந்து படத்தில் நடித்தார். வில்லனை, அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வதம் செய்யும் உச்சக்கட்ட காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார்.
 
 
விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் 30 நாட்கள் படப் பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஆந்திர மாநிலம் பைரவக்கோனா என்ற இடத்தில், சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளோம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.'' 

 

Comment (0) Hits: 633

'பிராணா' படத்தின் பர்ஸ்ட் லுக்

நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பிராணா. திரில்லர் கதையைக் கொண்ட இந்த படம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் தயாராகிறது.

 

இந்த படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் துல்கர் சல்மான் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

 

அந்த பர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Comment (0) Hits: 630

தளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள்...!

தளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

 

நாளைய தீர்ப்பால் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்டு மக்களின் மனதை கொள்ளை கொண்ட தளபதியாக திகழ்பவர் விஜய் .

இவர் இன்று  தனது  44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்காக பிரபலங்கள் பலர் வாழ்த்து சொல்லி மகிழ்ந்து வருகின்றனர்.

நடிகர் விஜய் என்ற ஒற்றைப் பெயர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளது.

ரசிகர்களால் தளபதி எனத் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜய் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் திருவிழா போலக் காட்சியளிக்கும்.

தமிழகம் முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் எனப் பல ஏற்பாடுகளை ரசிகள் செய்வது வழக்கம். அதிலும், எல்லா ஆண்டும் மக்களுக்கான நலத்திட்டத்தைச் செயல்படுத்துவதை ரசிகர்கள் கடமையாக கொண்டுள்ளனர். 

 

எனினும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான நிலையில் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தமிழ் சினிமா ஆரம்ப காலம் முதலே இரண்டு திரை ஆளுமைகளை மையப்படுத்தியே நகர்ந்து வந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி-கமல், என்று தொடர்ந்த பாரம்பரியம் தற்போது விஜய்-அஜித் என்ற பாத்திரங்களுக்கு இடையே வந்து நிற்கிறது.

 

அடுத்த தலைமுறைக்கான இரண்டு முக்கிய நடிகர்கள் யார் என்ற தேடலை சினிமா ரசிகர்கள் இன்னும் தொடங்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு விஜய்யும், அஜித்தும் திரைத்துறையை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.

 

அதிலும் 44 வயதைக் கடந்திருக்கும் விஜய் இளமை மாறாத தோற்றத்தோடும், துடிப்போடும் இன்றும் நடித்து வருகிறார்.

 

 

விஜய்  தொடக்கத்தில்  தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

 

இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை " தளபதி" என்று அழைக்கிறார்கள்.

 

 

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்

 • காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது
 • திருப்பாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)
 • விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள்
 • நாளைய சூப்பர் ஸ்டார் - திருப்பாச்சி, சிவகாசி-2006
விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள் 
 • இந்த ஆண்டின் கேளிக்கையாளர்-போக்கிரி, அழகிய தமிழ் மகன் -2007
 • விருப்பமான நாயகன்-வேட்டைக்காரன்-2009
 • இந்த ஆண்டின் கேளிக்கையாளர்-நண்பன்,துப்பாக்கி-2012
 • விருப்பமான நாயகன்-துப்பாக்கி-2012

 

பிற விருதுகள்

 • கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
 • கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
 • கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
 • பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது
 • போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
 • போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
 • வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
 • துப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருது 

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த திரைப்படத்தின் போஸ்டரும், அதன் தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.  ‘சர்கார்' என பெயரிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டரில், விஜயின் ஸ்டைலிஷான லுக் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்திருக்கிறது.

 

ஒரு புறம் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகளும் பஞ்சமில்லாமல் வந்து கொண்டிருக்கின்றன.

 

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்கார் திரைப்படம் அதற்கான பதிலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Comment (0) Hits: 515

Page 1 of 19