நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அதன் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம்.ஃபராஸ் தெரிவித்துள்ளார்.
சதொச என்பது எப்போதும் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பாகும். இம்முறை பண்டிகைக் காலத்தில் மிகவும் குறைந்த விலையில் பொருட்களை விநியோகிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக கலாநிதி பராஸ் குறிப்பிட்டார்.
உதாரணமாக, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 52 ரூபாவிற்கும் ஒரு கிலோ சீனி 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
போதியளவு பொருட்கள் சதொச களஞ்சியசாலைகளில் கையிருப்பில் உள்ளதாகவும் கலாநிதி பராஸ் மேலும் கூறினார்.