வணிகம்

இன்னும் சில நாட்களில் மரக்கறி வகையின் விலையில் மாற்றம் ஏற்படலாம்!

மலையக பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமையினால் அதற்கு விலை அதிகரித்துள்ளது என்று விவசாய திணைக்களம் விவசாய அமைச்சிக்கு அறிவித்துள்ளது.


கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் மற்றும் யூன் மாதங்களில் மலையக மரக்கறி வகையின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று விவசாய திணைக்களம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.


இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்லியூ.எம்.எம்.வீரகோன் விவசாய அமைச்சரிடம் தெரிவித்திருந்தார்.


விவசாய அமைச்சில் நடைபெற்ற நாம் உற்பத்தி செய்வோம் நாம் உண்போம் என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து நிறுவனங்களுடனும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இதன்போது அமைச்சர் நாட்டு மக்களால் பயன்படுத்தப்படும் மலையக மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பினார்.


இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவும் சீரற்ற காலநிலையால் மலையகத்தில் மரக்கறி வகை உற்பத்திக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.


இதேபோன்று பதுளை மாவட்டத்தின் உற்பத்திகள் மீது காற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில்  மரக்கறி வகையின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comment (0) Hits: 491

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் சிறந்த முறையில்

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் இந்தாண்டில் சிறந்த முறையில் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கொழும்பு பங்குச் சந்தையின் தலைமை நிறைவேற்று பணிப்பாளர் ராஜீவ பண்டாரநாயக்க,

பங்குச் சந்தைக்கான வெளிநாட்டு உள்வாங்கல் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வருடத்தில் 53 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மூலம் 112 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகம் எனவும் தலைமை நிறைவேற்று பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 494

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு !

சந்தைகளில் மரக்கறிகளின் விலை நூறு வீதத்தால் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது..

 

கடந்த சில நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தக்காளி 220 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 ரூபா முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக சங்கத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

புடலங்காய் 100 ரூபா முதல் 160 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் குறையக்கூடும் எனவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 
 
  Comment (0) Hits: 545

இலங்கையின் கைத்தொழில் உற்பத்தியில் அதிகரிப்பு

இலங்கையின் கைத்தொழில் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைத்தொழில் உற்பத்தி நான்கு சதவீதத்திற்கு மேலதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உருக்கு உற்பத்திகள், இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் உற்பத்திகள், அடிப்படை இரும்பு உற்பத்திகள் போன்ற துறைசார்ந்த கைத்தொழில்கள் கணிசமான வளர்ச்சியைப் பதிவுசெய்ததாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Comment (0) Hits: 561

தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு - மழை செய்த சதி…!

கடந்த ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக போப்ஸ் அன்ட் வோர்க்கஸ் தேயிலைத் தரகு நிறுவனம் அறிவித்துள்ளது.

2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 650 கோடி ரூபா ஈட்டப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம்  தேயிலை ஏற்றுமதியின் வருமானம் ஆயிரத்து 710 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதென அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன் பிந்திய அறிக்கையில் தேயிலை ஏற்றுமதி குறித்து புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக தேயிலை உற்பத்தி குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 556

இலங்கை காப்புறுதி துறையில் வளர்ச்சி

இலங்கை காப்புறுதி துறையில் கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் 15.53 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15,862 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.

2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் நீண்டகால காப்புறுதி, பொதுவான காப்புறுதி நடவடிக்கைகள் மூலம் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 16 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 1 இலட்சத்து 2ஆயிரத்து 155 ரூபா பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 436

மழை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு !

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பெரும்பாலான இடங்களில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை மலையகப்பகுதிகளில் மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் அதிகரித்துள்ளன.


அத்தோடு தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 511

இலங்கையின் தேயிலை உயர்தரத்தைக் கொண்டுள்ளது

இலங்கையின் தேயிலை உயர்தரத்தைக் கொண்டிருப்பதாக, ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த தேயிலை தொடர்பான ஆய்வு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கைத் தேயிலையின் தரம் குறித்து ரஸ்ய அதிகாரிகள் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் தாம் மகிழ்சியடைவதாக, தேயிலை ஆணையாளர் ஜயந்த தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்த அதிகாரிகள், விவசாய பணிப்பாளர் நாயகம், இலங்கையில் சிறந்த தேயிலை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் தேயிலை தொழிற்சாலைகளையும் பார்வையிட்டுள்ளனர்.

ரஸ்ய அதிகாரிகளது ஆய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை தேயிலை ஆணையாளர், இதுவரை காலமும் தேயிலை குறித்து காணப்பட்ட சந்தேகங்கள் நீங்கியுள்ளதாகவும, இலங்கையின் தேயிலை தொடர்பாக இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானது என்றும், இலங்கை தேயிலைக்கான ரஸ்ய சந்தையை மேலும் விரிவுபடுத்துவதற்கு இது பெரிதும் உதவும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

Comment (0) Hits: 462

பால்மாவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

உலக சந்தையில் பால்மாவின் விலை கடந்தவாரம் அதிகரித்தமையினால், பால்மா இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் ஒரு மெற்றிக்தொன் பால்மாவின் விலை 3,250அமெரிக்க டொலரிலிருந்து 3,350 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இது ஜுன் மாதத்தில் 3,400 முதல் 3,500 அமெரிக்க டொலாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறக்குமதி செலவை ஈடுசெய்யும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் ஒரு கிலோ பால்மாவின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையின் பால்மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலருக்கான ரூபாவின் வீழ்ச்சி என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது கையிருப்புள்ள பால்மாக்கள் எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கே போதுமானது என்றும், அதன் பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இறக்குதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு கிலோ பால்மாவின் விலையை ஆகக் குறைந்தது 75ரூபாவினால் அதிகரிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் பால்மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment (0) Hits: 478

கட்டார் - இலங்கை இடையே 73 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக நடவடிக்கை

கட்டார் மற்றும் இலங்கைக்கு இடையில் 73 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கைகள் கடந்த வருடத்தில் இடம்பெற்றிருப்பதாக, கட்டார் வர்த்தக சபையின் துணைத் தலைவர் மொஹமட் பின் டவார் அல் குவாரி தெரிவித்துள்ளார்.

கட்டாரில் தொழில் வாய்ப்புக்களை அதிகரித்தல் என்ற தலைப்பில் கட்டாரிலுள்ள இலங்கைக்கான தூதரகம் மற்றும் வர்த்தக சபை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தென்னாசியாவில் இலங்கையை மூலோபாய பங்குதாரராக தமது நாடு கருதுவதாக குறிப்பிட்ட துணைத் தலைவர், இரண்டு நாடுகளும் பல்வேறு உடன்படிக்கைகளிலும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டுள்ளன. ஆனால் அதன் மூலமான பெறுபேறுகளை இரு நாடுகளுக்கும் இடையில் பெருமளவில் காணமுடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comment (0) Hits: 460

தங்கத்திற்கான தீர்வை வரி அதிகரிப்பு

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15 வீத தீர்வை வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது.

இந்த இறக்குமதி வரி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 556

தெங்கு உற்பத்தியை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டம்

2018 தொடக்கம் 2020 ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தெங்கு உற்பத்திக்கான திட்டம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது.

தெங்கு முக்கோணப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர நிலப்பரப்பில் உள்ள தெங்கு உற்பத்தி அறுவடையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெங்கு உற்பத்தி சபையின் உதவி முகாமையாளர் டப்லியூ.ஏ.எச்.சேனாரத்தன தெரிவித்தார்.

2 வருடங்களுக்கு மேலாக நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வருடாந்தம் 3,000 மில்லியன் ரூபாவிற்கு மேலாக பெற்றுக்கொள்ளப்பட்ட தெங்கு அறுவடை தற்போது 2,300 மில்லியன் ரூபாவாக குறைவடைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comment (0) Hits: 446

சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள்

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அதன் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம்.ஃபராஸ் தெரிவித்துள்ளார்.

சதொச என்பது எப்போதும் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பாகும். இம்முறை பண்டிகைக் காலத்தில் மிகவும் குறைந்த விலையில் பொருட்களை விநியோகிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக கலாநிதி பராஸ் குறிப்பிட்டார்.

உதாரணமாக, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 52 ரூபாவிற்கும் ஒரு கிலோ சீனி 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

போதியளவு பொருட்கள் சதொச களஞ்சியசாலைகளில் கையிருப்பில் உள்ளதாகவும் கலாநிதி பராஸ் மேலும் கூறினார்.

Comment (0) Hits: 647

இன்றைய தங்க நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் 53 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 49 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 690 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 225 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதனிடையே வெள்ளி ஒரு கிராமின் விலை 100 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 433

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்றுவீதம்,

மத்திய கிழக்கு நாடுகளுக்கான நாணய மாற்றுவீதம்,

 

 

Comment (0) Hits: 773

வங்கிகளற்ற நிதி நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானத்திற்கு வந்துள்ள மத்திய வங்கி

வங்கிகளற்ற நிதி நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தீர்மானங்கள் தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத்திய வங்கியின் ஆளுநரால் தௌிவூட்டப்பட்டது.

2018 ஆம் ஆண்டு சேமிப்பிற்கான நிதி மற்றும் நிதி கொள்கைகள் தொடர்பான கொள்கை பிரகடனம் இன்று வௌியிடப்பட்டது.

அதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களின் மூலதன மட்டத்தை மேலும் சக்திமயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆரம்பகட்ட மூலதனமாக ஒரு பில்லியன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு 1.5 பில்லியனாகவும், 2020 ஆம் ஆண்டு 2 பில்லியன் வரையிலும் இந்த மூலதனம் அதிகரிக்கப்படவுள்ளது.

சந்தைகளில் முன்னெடுக்கப்படும் கையகப்படுத்தல் மற்றும் ஒன்றிணைந்த அனுமதிப்பத்திரங்களை கொண்டு இயங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களை மேலும் சக்திமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே மத்திய வங்கியின் கருத்தாக அமைந்துள்ளது.

Comment (0) Hits: 418

மொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்தும் டேடா + கடனட்டை

இலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், இலங்கையின் முன்னணி வகிக்கும் வங்கிகளுள் ஒன்றான கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து முதன் முறையாக புதிய கடனட்டை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. 

ஓர் தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர், ஓர் நிதி நிறுவனத்துடன் இணைந்து இரு சாராருக்கும் அனுகூலங்கள் பலவற்றை வழங்கக்கூடிய கடனட்டை ஒன்றை இலங்கையில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். 

தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க தொலைத்தொடர்பு மற்றும் வங்கித் துறையின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் ஆரம்பமும் இதுவே. 

இது இலங்கையின் முதலாவது தனித்துவமான கொம் பேங்க் டேடா கடனட்டையாகும். கடனட்டை நடவடிக்கைகளை கொமர்ஷல் வங்கி கையாள்வதுடன் அதற்கான டேடாவினை மொபிடெல் வழங்குகிறது.

மொபிடெல் எப்பொழுதும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி வகித்து வருகிறது, அதேபோல் தமது வர்த்தக நாமத்தின் உறுதிப்பாடான ‘We Care. Always’க்கு இணங்க புத்தாக்கம் மிக்க மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ICT தீர்வுகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் இலங்கையின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துகிறது.

வாடிக்கையாளரின் மன நிறைவை உறுதிப்படுத்தி வாழ்க்கை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மையமாகக் கொண்டுள்ளது.

இந்த கடனட்டையானது வழமையான சேவைகளை வழங்குவதுடன் மொபிடெல் வாடிக்கையாளர், கடனட்டையை பாவிக்கும் ஒவ்வொரு முறைக்கும் அவரது மொபிடெல் இணைப்புக்கு இலவச டேடாவுடனான தனித்துவமான அனுகூலங்களையும் வழங்குகிறது. 

கடனட்டை மூலம் பாவிக்கப்படும் ஒவ்வொரு 1000 ரூபாவுக்கும் வாடிக்கையாளருக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 50 MBடேடா இலவசமாக வழங்கப்படும். எனவே நீங்கள் கடனட்டையை அதிகமதிகமாக பாவிக்கும் போது அதிகமதிகமாக இணையத்தில் இருந்திடலாம். 

மொபிடெலின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. நளின் பெரேரா கருத்து தெரிவிக்கையில்,

“இத்தொழிற்துறையில் புதிய கண்டுபிடிப்புக்களை முன்னெடுக்கும் பாரம்பரியத்தைக் கொண்ட மொபிடெல் இனரான நாம், கொமர்ஷல் வங்கியுடனான கொம் பேங்க் டேடா கடனட்டையை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். 

நாட்டில் முன்னணி வகிக்கும் வங்கிகளுள் ஒன்று என்ற வகையில் மாபெரும் வாடிக்கையாளர் தளத்தை இது கொண்டுள்ளதுடன் இக்கடனட்டையானது எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச டேடா மற்றும் மேலும் பல வெகுமதிகளை அளிக்கக்கூடிய ஒரு புதிய வழியும் ஆகும். இது கடனட்டைக்கு பிறகு அதிகமாக விரும்பப்படும் ஒன்றாக இருந்திடும் என நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம்.”

“கொமர்ஷல் வங்கி அட்டைகள்ரூபவ் பல தொழில்துறைகளை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. இது எமது பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாகும். இந்த சிறப்பு லோயல்டி அட்டையானது பல பன்முகப்படுத்தப்பட்ட அனுகூலங்களை கொமர்ஷல் வங்கியின் அட்டைதாரருக்கு வழங்குவதுடன் தனித்துவமான சலுகையாக இலவச டேடாவினையும் வழங்குகிறது. 

இவ்வாறானதோர் சலுகையை இலங்கையில் வழங்குவது இதுவே முதன் முறையும் ஆகும்.” உலகிலுள்ள முதல் 1000 வங்கிகளில் தொடர்ந்தும் ஏழாவது ஆண்டிலும் தரப்படுத்தல்களுக்கு உட்பட்டுள்ள இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்கிறது. இது 261 கிளைகளையும் 756 ATM களையும் இலங்கை முழுவதும் கொண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கி அட்டைகள், ஆண்டு முழுவதும் நல்ல வாழ்க்கைத் தரத்துக்கான சலுகைகளை வழங்குவதன் மூலம் சந்தையில் சிறந்த பெறுமதியுள்ள அட்டைகளாக தமது தரத்தை நிலைநிறுத்தியுள்ளது.

மொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்கள் விமான டிக்கெட்டுக்கள், வைத்திய ஆலோசனைகள், மொபைல் சாதனங்கள், கொமர்ஷல் வங்கியின் வருட இறுதி சலுகைகள் போன்ற மேலும் பலவற்றை இனிவரும் காலங்களில் எதிர்ப்பார்க்கலாம். தமது அட்டைதாரர்களுக்கு மேலும் பலவற்றை நீட்டிக்க தீர்மானித்துள்ளதுடன் மொபிடெல் வாடிக்கையாளர்கள்,  அஊயளா உடன் கொமர்ஷல் வங்கியின் ‘ஆயஒ டுழலயடவல சுநறயசனள’ மற்றும் மாஸ்டர் அட்டையின் சர்வதேச சலுகைகள் ஆகியவற்றை அட்டையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். மொபிடெல் 365 வழியாக விமான நிலைய லோன்ஜ்க்கு செல்லுதல் மற்றும் ஏனைய சேவைகள், விமான டிக்கட்டுக்கள் கொள்வனவு செய்வோருக்கு இலவச ரோமிங் சலுகைகள்ரூபவ் வட்டியற்ற திட்டங்கள் போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன. அட்டைதாரர்கள் கொமர்ஷல் வங்கி வழங்கும் சலுகைகளான சிறப்பு வங்கிக் கணக்கு சலுகைகள்ரூபவ் அட்டை கொடுப்பனவு தெரிவுகள் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்.

மொபிடெல் தொடர்ந்தும் வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்திசெய்வதில் புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. அத்துடன் மொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கியின் கொம் பேங்க் டேடா கடனட்டையின் மூலம் மொபிடெல் மீது வாடிக்கையாளர் கொண்டுள்ள நம்பகத்தன்மையும் நம்பிக்கைக்காகவும் பல வெகுமதிகளையும் வழங்குகின்றது.

Comment (0) Hits: 531