இந்திய சினிமா கொண்டாடும் நடிகராக இருக்கிறார் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களை பெற்றார்.
எப்போதும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்துகொள்வார்கள். தற்போது இவர்கள் இருவரும் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்களாம்.
இதுகுறித்து நேற்று இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவருமே கடும் ஷாக்கில் உள்ளார்கள்.
அதிலும் ரசிகர்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்திற்கு தான் தைரியமாக இருங்கள் என ஆதரவு டுவிட் செய்து வருகிறார்கள்
இந்த நேரத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்க புகைப்படத்தை மாற்றியுள்ளார். சிறுவயதில் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை புதிய டுவிட்டர் புகைப்படமாக இன்று அதிகாலை மாற்றியுள்ளார்.
அவரது டுவிட்டர் பக்க போட்டோ மாற்றமும் ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.