போதைப்பொருள் வியாபாரிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியுள்ளளோம். முன்னர் சர்வதேச போதைப்பொருள் மத்திய நிலையமாக இருந்தது. நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தியுள்ளோம். நான் சர்வதேச சமவாயங்களை மதிக்கின்றோம். மனித உரிமைகளை மதிக்கின்றோம். என நாடாளுமன்றில் ஜனாதிபதிஜ கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடகிழக்கின் ஆபிவிருத்திக்காக இராணுவத்தினர் வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படுகின்றன. மேலும் விடுவிக்கப்படும். காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய அதிஉயர் நீதி வழங்கப்படும், விடுதலைப்புலிகள் உறுப்பினர் விடுவிக்கப்பட்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச ரீதியில் மீள்வடிவமைக்கப்படும். நமக்கு எல்லோரும் சமம். வடகிழக்கு மக்களுக்கு கொருளாதார தேவை அதிகம். வேலைவாய்ப்பு , அடிப்படைவசதிகள், என்பன. அவர்களுக்கு குறைவின்றி வசதிகள் வழங்கப்படுகின்றன.
வடகிழக்கு மக்களின் அபிவிருத்திக்கு அந்த மக்களின் பிரதிநிதிகளை அரசுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். தற்காலிகம் எனினும் உங்கள் கோரிக்கைகளை கைவிடுங்கள்.
நீதித்துறை சுயாதீனமம் பேணப்படுகின்றது.
9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வினை காண்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.