இலங்கையின் பிரபல பாடகியும் இசைக்கலைஞருமான நீலா விக்கிரமசிங்க தனது 71 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.
அவர் இத்தாலியின் இத்தாலியின் மிலானோவுக்கான தூதராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
தூதுவராக தனது கடமைகளை இம் மாத தொடக்கத்தில் ஏற்றுக் கொண்ட அவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீலா விக்ரமசிங்க, கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் முன்னாள் இசை ஆசிரியராக இருந்தார். அவர் ‘அனே சேர் மற்றும் ‘ரன்டிக்கிரி சினா’ போன்ற பிரபலமான பாடல்களை பாடியுள்ளார்.