தீவிரவாதத்தினாலேயே நான் எனது தந்தையை இழந்தேன். ஆகவே தீவிரவாதத்தின் விளைவாக அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள், உடற்பாகங்களை இழந்தவர்கள், காயமடைந்தவர்களின் வலியையும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடியும்.
ஆகவே இப் பயங்கரவாத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அண்மையில் கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரியவாறு விசாரணைகளை நடத்தி, உண்மையைக் கண்டறியுமாறு கத்தோலிக்க மதத்தலைவரான பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பொலிஸாரிடம் வலியுறுத்தியிருக்கின்றார்.
தேவாலயத்திலிருந்த சி.சி.ரி.வி கமராவில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் பதிவான காட்சிகளை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல், அன்றையதினம் பதிவான அனைத்துக் காட்சிகளையும் பார்வையிட்டதன் பின்னர் சம்பவம் தொடர்பில் முடிவிற்கு வருமாறும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை இன்னமும் அரசாங்கத்தினால் கண்டறியமுடியவில்லை. அதேபோன்று இவ்விவகாரத்திலும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் பொலிஸாரும் கத்தோலிக்க சமூகத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.
இதன் விளைவாக கத்தோலிக்க சமூகத்தின் மத்தியில் அரசாங்கத்தின்மீதான நம்பிக்கையின்மை வலுவடைந்துவருகின்றது. இவ்வாறு பொதுமக்கள் அரசாங்கத்தின்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையில் சரிவு ஏற்படுவதென்பது நாட்டிற்கு உகந்ததா? என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.