பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர், இப்போது தான் சிங்கள மக்கள் இதனைப் படிக்கவும் உணரவும் ஆரம்பித்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
பொருளாதார தடை என்பதும் பொருளாதாரத்தின் மீதான ஒரு வகையான ஆக்கிரமிப்பு என்பதும் இப்போது தான் சிங்கள மக்களை உணர வைத்திருக்கிறது . ஆனால், தமிழர்கள் ஏற்கனவே இவற்றை நேரடியாக அனுபவித்து வாழ்ந்தவர்கள்.
நாம் கடும் நெருக்கடியோடு வாழ்ந்தவர்கள். அவ்வாறு இருந்தும் இந்த மண்ணிலே நாங்கள் வாழ்ந்து இருந்தோம் – எங்களுடைய வாழ்க்கை நகர்ந்திருந்தது என சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவித்தார்.