Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு இந்தியா உதவும் – இந்திய வெளிவிவகார அமைச்சர்

0 18

நம்பகமான நண்பன் என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா இந்த நெருக்கடியான தருணத்தில் ஒத்துழைப்புகளை வழங்கி ஆதரவாக இருக்கும்.

இருதரப்பு நெருக்கமான உறவுகளை சுட்டிக்காட்டி இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ள அவர், இருதரப்பு எதிர்பார்ப்புகளுக்கும் நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கையின் முயற்சிகளுக்குமானதொரு செயலூக்கமாகவே இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக கருதப்படுகின்றது.

அந்த வகையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக நிதியமைச்சர் மீண்டும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால் குறித்த விஜயமானது டெல்லிக்கானது அல்ல என்பதே உண்மையாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குஜராட்டில் எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைப்பெறவிருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கே நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இந்தியா செல்லவிருந்தார்.

இதன் போதே இந்திய பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கை தரப்பால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த மாநாடு  இரத்து செய்யப்பட்டுள்ளது. தீவிர கொவிட் பரவல்  காரணமாக  முதலீட்டாளர் மாநாட்டை இரத்து செய்யவதாக குஜராட் அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயமும் பிரதமர் மோடியுடனான சந்திப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை எதிர்க்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு இந்தியா ஊடாக தீர்வு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் கொழும்பிற்கு உள்ளன. இந்த எதிர்பார்ப்பிற்கு வலுசேர்க்கும் வகையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பும் அமைந்துள்ளது.

இதனடிப்படையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் எரிப்பொருள் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகவும் 400 மில்லியன் டொலர்களை இலங்கை அந்நிய செலாவணி இருப்பை பாதுகாப்பதற்காகவும்  மேலும் 500 மில்லியன் டொலர்களை அவசர கடனுதவியாக  பெற்றுக்கொள்வதே இலங்கையின் எதிர்பார்ப்பாக உள்ளது.

dr

ஆனால் 13 திருத்த சட்டத்தை முழுமையாக அமுலாக்கி தமிழ் மக்களின் அபிலாiஷகளை நிறைவேற்றுதல் மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துததல் உள்ளிட்ட இரு தரப்பு வணிக இணக்கப்பாடுகள் என்பவை இந்தியாவிற்கான  நிறைவேற்றப்பட வேண்டிய  உறுதிமொழிகளின் நிலுவைகளாக  உள்ளன.

அதே போன்று  இலங்கை – இந்திய கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படவிருந்த சுமார் 15 திட்டங்கள் இலங்கையால் ஒரு தலைப்பட்சமாக கைவிடப்பட்டுள்ளன.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், பலாலிக்கும் – சென்னைக்குமான விமான சேவை மற்றும் கெரவலப்பிட்டிய மின்நிலைய திட்டம்  உட்பட பல திட்டங்கள் கிடைக்காமை கொழும்பு மீதான டெல்லியின் கடும் அதிருப்திக்கு காரணமாக அமைந்ததுள்ளது.

இதனை நிவர்த்தி செய்து மீண்டும் சுமூகமான உறவை டெல்லியுடன் கட்டியெழுப்ப இலங்கை மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதன் முக்கிய சமிஞ்சையாக திருனோணமலை எண்ணைய் தாங்கி ஒப்பந்தம் கைச்சாத்து அமைந்துள்ளது.

அதே போன்று டெல்லியின் தகவல்களின் படி  எரிவாயு மற்றும் எரிப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவுகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை  இலங்கைக்கு வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

மறுப்புறம் கடன் தொகை ஒன்றை வழங்குவதற்கும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் இந்த கடன் தொகை மிக விரைவில் கிடைக்கும் என கூற இயலாது என்பதே அந்த தகவல்களின் உறுதிப்பாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.