தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும். இதனால், சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம். அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளாா்.