Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

சீன எதிர்ப்பு இந்திய ஆதரவு நிலை வெளிப்படுத்தலுக்கான டீலிங் என்ன?

0 50

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இந்தியா உதவவேண்டும் என்ற சொல்லில் உண்மை இருக்கலாம். ஏனனில் மிகப்பெரிய நாடு, பிராந்திய சக்தி என்பதால்.

இதற்கு முன்னரும் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சனைக்காக ஆயுதப்போராட்ட குழுக்களை உருவாக்கியது, ஆயுதப் பயிற்சி வழங்கியமை, தற்போதுள்ள தமிழ் கட்சிகளுக்கா இந்திய இலங்கை ஒப்பந்தத்தினையும் குறிப்பிடலாம்.

அதுபோன்று தற்போது இந்திய மீனவர்களால் வடக்கு மீனவர்கள் பாதிக்கின்றபோது சீனா அவர்களை குறிவைக்கின்றது என்று அளவுகடந்த பாசத்தினை சிலர் வெளிப்படுத்துகின்றனர். இங்கு பாதிக்கப்பட்ட மீனவர்களை கேட்டால் ஒன்று புரியும். தங்களுக்கு உதவிகளை தந்தவர்களை நாம் பேசவேண்டுமா? அல்லது உபத்திரங்கள் தருபவர்களை நாம் பேசவேண்டுமா?

இதிலிருந்துதான் இந்தியாதான் தீர்வு என்பவர்கள் தொடர்பில் சில கேள்விகள் எழுகின்றது.

சீனா எங்களின் எதிர்ப்பு நாடு, சீனா இறுதியுத்தத்தில் அரசாங்கத்திற்கு உதவியது. சீனா மனித உரிமை மீறல்கள் அதிகரித்த ஒரு நாடு, ஜனநாயகம் இல்லாத நாடு, ஊடக சுகந்திரமற்ற நாடு என எல்லாம் குறிப்பிடுவதன் உள்நோக்கம் என்ன?

சீனாவுடன் இந்தியாவை இந்த விடயங்களின் ஒப்பீடு செய்கின்ற போது இந்தியா மாநிலங்களின் உரிமைகளை பறிக்கின்றது, தேசிய இனங்களின் தேசத்தினை அழிக்கின்றது(காஷ்மீர்), மொழியை திணிக்கின்றது, மதத்தினை திணிக்கின்றது போன்ற விடயங்களை ஏன் கூறுவதற்கு விரும்புகின்றீர்கள் இல்லை.

தமிழரும் தேசம் என்பதையே கோருகின்றார்கள். பிறகு எப்படி இனப்பரம்பலை மாற்றியமைக்காதவாறு உங்களுக்கு ஒரு தீர்வை இந்தியா முன்வைக்கும்.

இறுதியுத்தத்தில் தமிழ் மக்களுக்காக இந்தியா என்ன செய்தது? இலங்கை இராணுவத்திற்கு தொழிநுட்ப மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா வழங்கியது. இதனை இந்திய இலங்கை தரப்புக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளன.

2009 ஆண்டளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சட்டத்தரணி என்.சிறிகாந்த தமிழர்களின் முதுகில் இந்தியா குத்தியுள்ளது என ஆவேசமாக பிபிசிக்கு தெரிவித்தார்.

இந்தியாவை தமிழர்கள் தலையீடு செய்ய கோரவேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய அமைதிகாக்கும் படையை இலங்கையில் இருந்து வெளியேற தமிழ் மற்றும் இலங்கை தரப்புக்கள் கோரின. ஆகவே இன்று தமிழ் மக்களிடம் இருந்து கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்ற போதுதான் இந்தியா தலையீடு செய்ய முடியும் என, எந்த அடிப்படைகளில் இவ்வாறான கருத்துக்களை பரப்பபடுகின்றது என தெரியவில்லை.

இந்தியாவில் இருந்து வந்த அமைதிகாக்கும் படை இங்கு என்ன செய்தது என்று சொல்லாமல் மறுப்பதன் உள்நோக்கம் என்ன? அதனால் உங்களுக்கு கிடைக்கும் இலாபம் என்ன? சொந்த இனத்தின் பாதிப்புக்களை திட்டமிட்டு மறைப்பதன் நோக்கம்?

இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் எத்தனை பேரை கொன்றார்கள்? வல்வெட்டித்துறையில் எத்தனை தமிழ் மக்களை கொன்றார்கள்? இதனைவிட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை, போன்ற தமிழ் மக்களின் மனித அழிவுகள் பற்றி ஏன் பேசுவதில்லை.

இத்தனை விடயங்களையும் இந்திய இராணுவமே இன்றுவரை மறுக்கவில்லை.

ஊடக சுகந்திரம் பற்றி பேசுபவர்கள் இந்திய உலக தரவரிசையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதனையும் அதில் எத்தனை நாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பதனையும் தெளிவாக பார்க்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தினர் ஈழமுரசு, முரசொலி என்ற இரு பத்திரிகை நிறுவனங்களையும் அழித்தனர் என்பதனையும் மறக்கமுடியாது.

இத்தனையையும் மேற்கொண்ட இராணுவத்தினர் மீது இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தது?

தமிழர் தரப்பு இந்தியஇராணுவத்தற்கு எதிராக செயற்பட்டதில் தவறுகள் உண்டு என்று கூறுபவர்கள். இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட இத்தனை குற்றங்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது என்பது தொடர்பில் கூறவேண்டும்.

இந்தியா தொடர்பில் தமிழ் மக்களுக்கு நல்லதாக கூறவேண்டுமானால் வரலாற்றினை மறைக்க வேண்டிய தேவை உள்ளது. மனித உரிமைகள் மீறல்களுக்காக ஜெனீவா மனித உரிமை பேரவையில் இந்தியாவின் செயற்பாடு எவ்வாறு உள்ளது. தமிழ் மக்களுக்கு ஆதரவாக என்ன விடயங்களை செய்துள்ளது. அதேநேரம் அங்கு இந்தியா தொடர்பில் எவ்வாறான மனித உரிமை மீறல்கள் பாகிஸ்தானினால் முன்வைக்கப்படுகின்றது என்பது தொடர்பிலும் விவரமாக பார்க்கப்பட வேண்டும்.

சீனா ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை. ஏனனில் அந்த நாட்டு அரசாங்கங்களுடன் அந்த நாடு பேசிக்கொள்ளுகின்றது என்ற ஒருவாதமும் முன்வைக்கப்படுகின்றது.

இந்தியாவும் இலங்கை அரசுடன்தான் பேசுகின்றது. தமிழர் தரப்பு என்ற ஒன்றினையும் சிலவேளைகளில் சந்திக்கின்றது. அதேநேரம் தமிழர் தரப்பினை தன்னுடைய நலனுக்காக பயன்படுத்துகின்றது.

இந்தியா 13 ஆவது திருத்தத்தினை தீர்வாக முன்வைப்பதற்குரிய காரணமே தமிழர் பிரதேசத்தில் இந்திய இராணுவம் செயற்பட்ட விதம். 13 யை தீர்வாக தமிழ் மக்கள் இன்று ஏற்றுக்கொள்ளுவார்களாக இருந்தால் அன்று அதனை தீர்வாக ஏற்றுக்கொள்ளதாது தவறாக கருதப்படும். அதனுடன் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களும் தீர்வை விரும்பாத தரப்பால் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களால் உருவானவை என்பதுடன் வரலாற்றில் இந்திய இராணுவத்தின் கறுப்பு பக்கங்கள் தமிழர்களுக்கு மறைக்கப்படும்.

இந்தியாவை புகழ்ந்து தள்ளுபவர்கள் ஒன்றினை புரிந்துகொள்ளவேண்டும். இந்தியா மாநிலங்களின் உரிமைகளை மீறுகின்றது. மொழியை திணிக்கின்றது, மதத்தினை திணிக்கின்றது, தேசிய இனங்களின் உரிமைகள் பறிக்கின்றது. இவ்வாறான ஒருநாடு எவ்வாறு இன்னுமோர் நாட்டு மக்களுக்கு இவற்றினை பெற்றுக்கொடுக்க உதவும் என்று

சீனாவில் ஜனநாயமில்லை, ஊடக சுகந்திரமில்லை, மனித உரிமை இல்லை என்பதால் எதிர்ப்பீர்களானால் இந்தியாவிடம் தமிழ்ர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை என்பதனையும் சுட்டிகாட்டி எதிர்க்கவேண்டுமல்லவா?

சீனா மீது நீங்கள் முன்வைக்கு விமர்சனங்களை மறுக்கவேண்டிய தேவைகள் எதுவும் எமக்கில்லை. எனினும் சீனா காட்டி இந்தியாவை நியாயப்படுத்தும் போக்கு தவறு என்பதே நிலைப்பாடு.

உங்களுக்கு எந்த இலாபமும் இல்லாமல் இந்தியாவுக்காக நீங்கள் செயற்படுகின்றீர்களா? அப்படி உங்களுக்கு கிடைக்கும் இலாபம் என்பது இனத்துக்கான இலாபமா? இல்லை தனிப்பட்ட இலாபமா?

Leave A Reply

Your email address will not be published.