Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ரெலோவின் முயற்சிக்கு ஆதரவளிப்பது தார்மிக கடமையல்லவா?

0 87

ரெலோ தமிழ் பரப்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளுகின்றது. அவ்வாறான முயற்சிகளை பலவீனப்படுத்துகின்ற செயற்பாடுகளை தமிழரசுக் கட்சி மேற்கொள்ளுவது வழமை. அது கட்சி அரசியலும் கூட.

பத்து கட்சிகளின் கூட்டு என்பதும் இவ்வாறே சென்றது. எனினும் ரெலோவின் முயற்சி என்பது 13 ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த இந்தியாவினை கோருவது. இந்த கோரிக்கை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம்.

ஆனால் 13 ஆம் திருத்தற்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அந்த விமர்சனங்களை முன்வைப்பதற்கான தார்மிக உரிமை கொண்டுள்ளனவா?

மாகாணசபை அறிவித்தவுடன் யார் முதலமைச்சர் வேட்பாளர் என அடிபடப்போகும் தமிழரசுக் கட்சி, ரெலோவின் முயற்சிக்கு விமர்சனங்களை முன்வைப்பது சரியானதா?

மாகாணசபை தேர்தலில் போட்டியிடப் போகின்ற அனைத்து கட்சிகளும் ரெலோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவதில் உள்ள சிக்கல் என்ன?.

தற்போதுள்ள மாகாணசபை முறைமை தவறு என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதனுடாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அடைந்துவிட முடியாது என்பதும் உண்மை.

ஆனால் அதன் அதிகாரங்களுக்கு வருவதற்காக நீங்கள் கூறப்போகின்ற தேர்தல் பிரச்சார அறிவிப்புக்கள் எல்லாம் மாகாண சபை முறைமையின் ஊடாக மக்களுக்கு ஆற்றப்போகின்ற சேவைகளாகத்தானே இருக்கும்.

ரெலோவின் ஆரம்பம் 13 ஆம் திருத்ததினை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓர் கோரிக்கை கடிதத்தினை முன்வைப்பது. நீண்டகாலமாக மாகாணசபை தேர்தல்கள் இடம்பெறாமல் ஆளுநர்களின் கீழ் மாகாண நிர்வாகங்கள் சென்றுகொண்டிருக்கின்றது.

அதுபோன்று இந்தியா தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு 13 ஆம் திருத்தத்தினை தீர்வாக முன்வைக்கின்றது. 1987 ஆணடு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட 13 ஆம் திருத்தம் முழுமையான ஒரு ஆட்சியை கூட காணாது அதன் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

தற்போது கூட அதன் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றது. ஆகவே இந்தியா முன்வைக்கும் தீர்வினை கூட இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது. ஆகவே இந்தியா முன்வைத்த தீர்வு இன்றுவரை நடைமுறைப்படுத்தாததே இந்தியாவின் இராஜதந்திர தோல்வி.

அதனையும் கடந்து இந்தியா இன்றும் தீர்வாக முன்வைக்கின்ற போது தமிழர் தரப்பு அதனை மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளாக நடைமுறைப்படுத்த கோருவதில் என்ன பிரச்சனை உண்டு.

இங்கு எங்கு நிரந்திர பிரச்சனைக்கு தீர்வு குழம்பபோகின்றது. இருப்பதே நடைமுறையில் போராடி பெறவேண்டிய விடயங்கள் பல உள்ளன. அதுபோன்றுதானே இதுவும் ஒன்று. குறிப்பாக நினைவுகூரல் விடயத்தில் இவ்வாறான விளக்கங்கள் கட்சிகளால், சட்டநிபுணர்களினால் வழங்கப்படுவதுண்டு.

கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட பின்னர் இந்தியா இந்த விடயத்தினை நடைமுறைப்படுத்துவது என்பது இயலாத காரியம் ஒன்றாகத்தான் இருக்கும். தென்னிலங்கையை பொறுத்தவரை இந்த 13 ஆம் திருத்தத்தினை அரசியலமைப்பில் இருந்து வெளியில் எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

ஆகவே இந்தியாவின் தீர்வினை தென்னிலங்கை உதாசீனம் செய்கின்ற நிலமை உருவாகுமானால், தமிழர்களின் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவேண்டிய சூழல் இராஜதந்திர ரீதியில் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சிலவேளைகளின் ரெலோ கருதலாம்.

ஆகவே ரெலோ எடுத்த முயற்சியை கைவிடாது இணங்கும் கட்சிகளுடன் இணைந்து இந்திய பிரதமருக்கு கோரிக்கை கடிதத்தினை அனுப்பவேண்டும். ரெலோ எடுத்த 13 ஆவது திருத்ததினை நடைமுறைப்படுத்துங்கள் என்ற கோரிக்கையினை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் என தமிழரசுக் கட்சி பெயர் மாற்றம் செய்ய ரெலோ அனுமதித்ததன் தவறே இது.

ரெலோ எடுத்த முயற்சிக்கு ரெலோ தலைமை தாங்க வேண்டும். இலக்கினை மாற்றி ஒற்றுமையாக வந்தவர்களை குழப்பி, தற்போது இதற்கு அவசியமில்லை என்று கூறுவது ரெலோவின் தலைமைத்துவ பண்புகளை கேள்விக்கு உட்படுத்துகின்றது. இதில் ரெலோ தெளிவாகவும், விரைவாகவும் செயற்படவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.