Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

ஜெனீவா திருவிழா ஆரம்பம் – மோடியின் கடிதம் சறுக்கினால் அடுத்த கடிதம் அம்போ

0 49

ஜெனீவா மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் அடுத்தமாதம் 28 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் ஆரம்பம் வரை இடம்பெறவுள்ளது.

வழமைபோன்று பல நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் பேரவையில் பேசப்படும்.

ஈழதமிழ் மக்களை பொறுத்தவரையில் ஜக்கிய நாடுகள் சபையினைதான் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக பார்க்கின்றார்கள். எனினும் ஜக்கிய நாடுகள் சபையின் எந்த பிரிவும் தமிழ் மக்கள் நம்பக்கூடியளவு எந்தவிடயங்களையும் கையாளவில்லை என்பதே உண்மை.

ஜக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தமிழினத்தின் பாதிப்புக்கு ஏற்றுக்கொள்ளகூடியதாக இல்லாது இருந்தும் அதனை நம்புவதற்கு காரணம் அதனை விடுத்து வேறு அமைப்புக்கள் இல்லை என்பதே!

ஜக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் என்பன நேர்மை, உண்மை, நீதி என்பவற்றுக்காக உழைப்பதில்லை. பொதுவாக அவ்வாறு தெரிந்துகொண்டாலும் அதன் உண்மை நோக்கம் என்பது நாடுகளுக்கிடையில் யுத்தம் ஏற்படாமல் தவிர்ப்பதே!

ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய பாதுகாப்பு, பொருளாதார நிலைகளை விளங்கி வெளிப்படுத்துகின்ற வெளிநாட்டு கொள்கைகளுக்கு அமையவே ஜக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் அமையும். அங்கும் வல்லாதிக்க நாடுகளின் பெறுமதி என்பன உயர்வானது.

வெளிநாட்டுகொள்கைகளுக்கு அமைவாக செயற்பட்டாலும் பெயரளவில் மனித உரிமைகள், சுகந்திரம், ஜனநாயகம், கல்வி, வறுமை, படுகொலைகள், பெண்விடுதலை, சுற்றுச்சூழல் தொடர்பில் அதிக அக்கறை எடுத்து பேசுவது. அவ்வாறான விடயங்களில் தீர்மானங்களை எடுப்பது.சர்வதேச சட்டங்களை உருவாக்குவது போன்றவை தொடர்ந்தும் இடம்பெறும் நிகழ்வுகளாகும்.

இவ்வாறு உருவாக்கப்படும் தீர்மானங்கள், சட்டங்கள் என்பனவே நாடுகள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு மிகப்பிரதான கடிவாளமாக காணப்படும்.

பல விடயங்களை நாடுகள் ஏற்றுக்கொள்ளாது இருக்கமுடியும். அங்கும் பெரும்பான்மை தரப்பின் ஆதரவோடு மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும். ஏற்றுக்கொள்ளாத நாடுகளுக்கு அந்த தீர்மானங்கள், சட்டங்கள் எவ்விதத்திலும் பொருந்தாது.

எனினும் தற்போது பாதிக்கப்பட்ட தரப்பு அந்த தீர்மானங்களை ஏற்றிருந்தால் , ஏற்றுக்கொள்ளாத நாட்டுக்கு எதிராகவும் அவ்விடயங்களை கையாள முடியும் என்ற நிலைக்கு ஜக்கிய நாடுகள் சபை வந்துள்ளது.

எனினும் அந்த நாடு பொருளாதார உதவிகளை பெற்றுக்கொள்ள, சலுகைகளை பெற்றுக்கொள்ள, திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்த தீர்மானங்களுக்கு உட்பட்டாலே வழங்குவோம் என்ற நிபந்தனைகளை முன்வைக்கும். இதனாலே பல நாடுகள் அவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவதுண்டு.

பெரும்பான்மையுடன் முடிவுகள் எடுக்கப்படுவதால் ஒரு நாட்டுக்கு எதிராக முடிவுகளை எடுக்கின்ற போது பல நாடுகளின் ஆதரவு தேவை. அதற்காக வெளிவிவகார அமைச்சு மட்டத்திலான பேச்சுக்கள் இடம்பெறும். இங்கு அனைத்துநாடுகளுடன் பேசி ஆதரவு கேட்பதுக்கு பதிலாக இருக்கின்ற மற்றொரு விடயம்தான் வல்லாதிக்கநாடுகளின் ஆதரவு எந்த பக்கமோ அந்தபக்கமே வெற்றி என்ற யதார்த்த நிலை.

இதற்காகதான் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மன், இந்தியா போன்ற நாடுகளுடன் ஜரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் ஒன்றியங்களுடனும் தமிழ் தரப்பு பேசுவது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஏற்பட்ட பாதிப்புக்கு நீதி கோருவதற்கு பதிலாக வல்லாதிக்க நாடுகளின் விருப்பத்திற்கு அமைவாக நீதியை கோருகின்றார்கள் என்பதே இங்கு எழும் பிரச்சனை.

தமிழ் மக்களின் உரிமை பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்புக்களில் ஒன்றே யுத்த அழிவுகள். யுத்த அழிவுகளுக்கு நீதி கிடைக்கின்ற போது தமிழ் மக்களுக்கு உரிமை சார்ந்த பிரச்சனை என்ற ஒன்று இருக்ககூடாது. இதனைதான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கோரிக்கையாக முன்வைத்திருக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தில் மாற்றங்கள் உருவானாலும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக பாதிப்புக்களை தென்னிலங்கை எல்லா கட்சிகளுமே செய்துள்ளன. எதிர்க்கட்சி மற்று ஆளும்தரப்பு என்பன தமக்குள் மோதிக்கொண்டாளும் தமிழர் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளார்கள் என்பதற்கு கடந்துவந்த பாதையே சான்று.

ஆகவே இவர்கள் இந்த விடயத்திற்கு நீதி வழங்குவார்கள் என்று நாம் நம்புவோமானால் அதற்கு பேர்தான் முட்டாள்தனம்.

உள்நாட்டு விடயங்களை கையாளுவதற்கும், நீதி வழங்கும் செயற்பாட்டிற்காகவும் கலப்பு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றால். அதன் நியமனங்கள் ஆரம்பம் சரி போன்று தோன்றினாலும் இறுதியில் இலங்கை என்ற நாடே மேலோங்கும் ஆகவே கலப்பு பொறிமுறையும் நேர்த்தியற்றது.

மூன்றாம் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை அதற்கான ஆதாரங்களை கொண்டு விசாரணை செய்து தீர்வு ஒன்றுக்கு வருவது பொருத்தமானதாக இருக்கும். அவ்வாறான சூழல் ஒன்று ஏற்படுவதற்கான கள யதார்த்தம் எதுவுமே கண்முன்னே இல்லை.

அடுத்த மாதம் இறுதியில் ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட இருக்கின்றது. அதேநேரம் 46கீழ்1 என்ற தீர்மானத்தினை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்து இருந்தது. எனினும் செப்டம்பர் மாத கூட்டத் தொடரிலே 46 கீழ்1 தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக முன்னேற்ற அறிக்கை ஒன்றினை முன்வைத்ததுடன், கொரோனா சூழல் பணி தாமதத்துக்கு காரணம் என்பதனை கூறியிருந்தது.

2021 மார்ச் மாதத்தில் கடும் போக்கிலான வெளிவிவகார போக்கு ஒன்றினை கடைப்பிடித்த இலங்கை அரசாங்கம் சுமார் 6 மாத காலத்தில் செப்டெம்பர் மாத கூட்டத்தொடரில் முன்னேற்ற அறிக்கை ஒன்றினை முன்வைத்தது மென்போக்கினை கடைப்பிடித்தது.

இந்த 6 மாத காலப்பகுதியில் வெளிவிவகார அமைச்சரின் மாற்றம் நிகழ்ந்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கடும்போக்கிலான வெளி்ப்படுத்தல்கள் பிறநாடுகளை அச்சமுட்டியது. இதற்காகதான் தினேஸ் குணவர்த்தன முதலில் வெளிவிவகார அமைச்சை பொறுப்பெடுத்தார். ஜநாவை பொறுத்தவரை 46 கீழ் 1 தீர்மாணத்திற்குள் இலங்கையை கொண்டுவந்ததே பெருமை என்ற நிலை.

ஆனால் தமிழ் மக்களின் நிலை 46 கீழ் 1 என்ற தீர்மானமே தமக்கான நீதியை பெற்றுத்தராது . இதில் இலங்கை இணங்கி என்ன பயன். இங்குள்ள மற்றொரு விடயம்தான் சாட்சியங்களை சேகரிப்பது. அதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டது. அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அகவே அதற்கான அடுத்த கட்ட நகர்வு எப்படி அமையும் என்பது தொடர்பில் இந்த கூட்டத்தொடரில் வெளிப்படுத்தப்படும் என்று நம்பலாம்.

தற்போது நாட்டின் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், பொலிஸ் மற்றும் அதிரடிப்படையின் படுகொலைகள், இராணுவமயமாக்கல், பயங்கரவாத தடைச்சட்டம், சிறைச்சாலை சித்திரவதைகள், சிவில் அமைப்புக்களின் சுகந்திரமான செயற்பாடுகள், புலனாய்வுத்துறையின் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், வெளிநாட்டு நபர்கள் திருமண முடிப்பது தொடர்பிலான வர்தகமாணி போன்ற இந்த காலப்பகுதியில் மனித உரிமை அமைப்புக்கள் கவனம் எடுத்த விடயங்கள் தொடர்பில் அறிக்கைகள் கவனம் செலுத்தலாம்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தற்போது இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத பல கூட்டங்களை நடத்தி முடிவுகளில் இணக்கம் கண்டு வருகின்றார்கள். இதற்கு பின்னர் ஜெனீவாவுக்கு கடிதம் எழுத ஆரம்பிப்பார்கள்.

ஆனால் தற்போது எழுதப்படுகின்ற கடிதம் பல விமர்சனங்களை சந்திக்க நேரிட்டால் ஜெனீவாவுக்கு கூட்டாக கடிதம் எழுதும் விடயமும் தமிழ் அரசியல் பரப்பில் இல்லாத செல்லும்.

தற்போது தூதுவரங்களுடன் சந்திப்புக்களை தமிழ் கட்சிகள் நடத்தி வந்தாலும்எதனை நோக்கி அவை இடம்பெறுகின்றது என்பது யாருக்கும் தெரியாது. எனினும் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த மாதம் தங்களின் சந்திப்புக்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை உணர ஆரம்பிக்கலாம் என தெரிவித்திருக்கின்றார். அது எவ்வாற நோக்கத்திலான மாற்றங்கள் என்று தெரியவில்லை.

குவாட் அமைப்பு தோற்றமே சீனாவின் பட்டுபாதை திட்டத்தினை முறியடிப்பது. தற்போது குவாட் அமைப்புக்கு அதிகளவான நிதியும் ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில் இலங்கையின் இன்றைய பொருளாதார நிலை என்பது வறுமையை நோக்கிய பயணம். சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ  இலங்கை வருகின்றார். அதனை தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த பசில் ராஜபக்ச , சீன வெளிவிவகார அமைச்சரின் பயண முடிவை அடுத்து இந்தியா செல்லுகின்றார்.

இலங்கையின் நிலையில் கேட்கின்ற கடனை கொடுக்க கூடிய இடத்தில் சீனாதான் உண்டு. அந்தளவு கடன் சீனா கொடுக்குமானால் இலங்கை மிகப்பெரிய உபகாரத்தை சீனாவுக்கு வழங்கவேண்டிவரும். சர்வதேச நாணயநிதியத்திடம் வாங்கப்படும் பணத்திற்கு நிபந்தனையும் உண்டு, வெளிபடை தன்மையும் உண்டு. சீனாவிடம் இத்தகைய சிக்கலும் இல்லை.

சீனாவிடம் செல்லுகின்ற இலங்கை தடுக்கமுடியாத நாடுகள், தங்களின் ஆதிக்கத்தினை இலங்கை மீது திணிப்பதற்காகவே தமிழர் விடயத்தை கையாளுகின்றார்கள். தமிழர் தரப்பு இன்றுவரை மிகப்பெரியளவிலான பிரச்சாரத்தினை, வெளிநாடுகளிடம் தங்களது பிரச்சனை தொடர்பிலான தெளிவை ஏற்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுபவையாக இல்லை.

தற்போது தொடக்கம் இலங்கை விடயம் தொடர்பிலான போக்குகள், முடிவுகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் விவாதங்கள் உருவாகும் நிலமையை தமிழர் தரப்பு மேற்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான பயணங்களை திட்டமிட்டு தமிழர் தரப்பு தவிர்க்கின்றார்களா என்ற சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க இயலாது.

Leave A Reply

Your email address will not be published.