Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

கஜேந்திரகுமார் சொல்லுவதும் செய்வது ஒரே மாதிரி ஆனால் கூட்டமைப்பு இல்லை –

0 11

கேள்வி 01:

தற்பொழுது நாட்டில் அதிகளவு பிரச்சனைகள் உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் தேவைப்படுகிறது. சீனாவின் பக்கம் இலங்கை சென்றுவிட்டதாக விமர்சனங்கள் காணப்படுகிறது


இந்தியாவுடன் உறவுகளை கட்டியெழுப்ப அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறான விடயம் தொடர்பில் தற்பொழுது இலங்கை இந்திய மேற்குலகம் சார்பாக இருக்கிறதா? சீனாவின் பக்கம் சென்றுவிட்டதா? சீனாவின் பக்கம் சென்றதனுடைய பாதிப்புக்கள் என்பன எவ்வாறான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இலங்கை தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?

பதில்01:


இதில் அதிகமான விடயங்களை தொடர்புபடுத்தி உள்ளீர்கள், தற்பொழுது இலங்கையினுடைய நிலைப்பாடு என்று பார்த்தால் எனக்கு எந்த விதமான சந்தேமும் இல்லை. இலங்கையினுடைய வெளிவிவகார கொள்கைகள், பொது கொள்கைகளின் நிலைப்பாடும் அது நகர்ந்து செல்கின்ற போக்கும் சீனா சார்பாக என்பதில் எந்த விதமான சந்தேமும் இல்லை.. தெற்காசிய வட்டாரத்தில் சீனாவினுடைய மிக நெருங்கிய கூட்டாளியாகவும் , கிட்டத்தட்ட சீனாவிற்கு தெற்காசியாவில் ஒரு தளத்தை வழங்குகின்ற ஒரு செய்ற்பாட்டாளராகவும் இலங்கை செயல்படுகிறன்து. அதற்கு பல காரணங்கள் உள்ளன ,


1 இலங்கைக்கு பொருளாதார அபிவிருத்தி என்ற நோக்கில் அதனை கட்டியெழுப்புகன்ற நோக்கில் சீனா அளவிற்கு இலங்கை நிதி உள்ளீடு சேர்கின்ற கடனை வழங்க கூடிய நிறுவனங்கள் காணப்படவில்லை ..சீனா ஏனைய நாடுகளுடன் உள்ள தொடர்பை விட இலங்கையுடனான தொடர்பு அதிகமாக உள்ளது . எனினும் நிதி ரீதியாக மட்டுபாடு காணப்படுகிறது.

ஆனால் சீனாவிடம் அதிகமான நிதி மூலதனம் காணப்படுகிறது . சீனா உலக நாடுகள் முழுவதிலும் முதலீடுகள் செய்துள்து . நிதி உதவியை வழங்குவதில் சீனாவுடன் இந்தியா மேற்குலகம் போன்ற நாடுகள் போட்டி போடமுடியாது .மேலும் சீனா உதவியை வழங்கும் போது உள்ளூர் பிரச்சினைகளுடன் தொடர்புபடாது .

உதாரணமாக அமெரிக்கா உதவி செய்யும் போது நிபந்தனையுடன் வழங்கும். அது இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் .. சீனா அவ்வாறு செய்வதில்லை . இதை சட்டரீதியாக விவாதிக்க முடியாது . சமூக ரீதியாக பார்ததால் இதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை ..யூக்தின் அடிப்படையில் கூறினால் சீனாவுடன் தொடர்பு வைத்திருக்கும் போது தனிப்பட்டரீதியாக நிதி பெற்றுக்கொள்வதற்கான Space / ஒரு சந்தர்ப்பம் காணப்படுகிறது .

தனிப்பட்ட அரசியல் தலைவர்களிற்கும் காணப்படுகிறது. அந்த விதமான போக்கு காணப்படுகின்றது .இது போன்ற காரணங்களினால் இலங்கை சீனா சார்பான நாடாக மாறுகின்றது எனலாம். ஆனால் இந்தியாவில் இருந்து வரக்கூடிய அழுத்தம் பற்றி தெளிவாக புரிந்து வைத்து இருப்பதன் காரணமாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு Blance / ஒரு சமத்துவத்தை பேனுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றார்கள், அதன் காரணமாக இந்தியாவிற்கு சின்ன விட்டுகொடுப்புகளை மேற்கொள்வதை காணக்கூடியவாறு உள்ளது. அடிப்படைரீதியாக மிக மிக Deep ஆக விட்டுகொடுப்புகளை இந்தியாவிற்கு மேற்கொள்வதில்லை. ஆகவே நான் சொல்கிறேன் இலங்கையினுடைய போக்கு முழுமையாக சீனா சார்பானது.

கேள்வி 02:

இலங்கையில் காணப்படுகின்ற சீனத்தூதரகங்களின் செய்திகள் எனபன குறிப்பாக
பதிவுகள் என்பது இங்கு இருப்பவர்கள் எல்லோரையும் குறிப்பிட்டு அவர்களுடைய பதிவுகள் இருக்கும் . மக்கள் வங்கியை Black list ல் கொன்டு வருவததை கூட அவர்களுடைய பதிவிகளில் வெளியிட்டு இருந்தார்கள் . அவர்களுடைய செயற்பாடு என்பது ஏனைய தூதரகங்களைப் போல் அல்லமல் வித்தியாசமான செயற்பாடாக இருப்பதற்கான காரண்ங்களாக நீங்கள் எவற்றை நினைக்கிறீர்கள்?

பதில் 02 :

இதில் எந்த விதமான தவறும் இருக்கவில்லை . ஏனெனில் என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொடர்பு ஊடகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ..

கேள்வி 03.:

இதை சீனாவினுடைய வெளிவவகார அமைச்சு வெளியிட வேண்டுமா? / தூதரகங்கள் தங்களுடைய செய்ற்பாட்டை வெளியிடல் பொருத்தமான ஒன்றா?

பதில் 03 :

தூதரகங்கள் அவ்வாறான அறிவிப்புக்களை மேற்கொள்வது என்பது சீன வெளிவிவகார துறையினுடைய கட்டுப்பாட்டுக்கு மீறிய செயற்பாடாக நீங்கள் பார்த்தால்தான் அது பிரச்சனைன்மாறாக சீன வெளிவிவகார அமைச்சினுடைய ஒரு பகுதியாக அவர்களுடைய அனுமதியுடன் மேற்கொள்ளும் போது எந்த பிரச்சனையும் இல்லை..

சீன தூதரகம் அங்குள்ள அமைச்சுக்கு கட்டுப்படாமல் என்று நான் நினைக்கவில்லை. அரசியல் Control system இதில் யாருமே கட்டுப்பாட்டை மீறி செயற்பட முடியாது. அந்த இயலுமை இலங்கையில் இருக்கின்ற தூதரகங்களில் இருப்பதாக அறியவில்லை. அதன் காரணமாக வெளியீடு செய்யும் போது சீனாவில் உள்ள அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும்.

கேள்வி 04:

பிற நாடுகளுடைய செயற்பாடுகளின் போது அந்த நாட்டினுடைய அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் , அது தொட்ர்பான கருத்துக்களை வெளியிடும் போது அமைச்சுக்கள் .அந்த நாட்டினுடைய தூதரகங்களில் இருந்து தெரிவிக்கப்படும் . அந்த விடயங்களை மிக பெரிய அளவில் வெளிப்படுத்துகிறது ..சீனா ஏன் இவ்வாறு பெரிய அளவில் வெளிப்படுத்துகிறது?

பதில் :

அதை நான் ஒரு பிரச்சனையாக பார்க்கவில்லை ..சீனாவில் இருக்கின்ற உயர் மட்ட உத்தியோகத்தர்களின் அனுமதியுடன் செயற்படுகின்றது ..

கேள்வி 05:

தமிழ் மக்களுடைய பிரச்சினையை பொறுத்த வரைக்கும் நீண்ட காலமாக தமது உரிமையை பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் போராடி வருகின்றனர் .. ஆயுத ரீதியாகவும் போராடி உள்ளனர். அதன் பின்னர் இந்தியாவிடம் இருந்து தீர்வுகளை அல்லது வெளிநாடுகளில் இருந்து தங்களிற்கான அழுத்தத்தின் மூலமாக தங்களிற்கான தீர்வுகளை பெற்றுகொள்ளமுடியும் என்பது இங்குள்ள கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.

ஆனால் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத பதிலை தான் இந்தியா முன்வைக்கின்றது. தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு என்பதை எவ்வாறான நடவடிக்கைகளை முன்வைப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் 05 :

இது மிகவும் Deep ஆன விடயம்.. மிகவும் ஆழமான கேள்வி…


இது ஒரு சமூகத்தினுடைய செயற்பாட்டின் விளைவாக பெற்றுக்கொள்கின்ற பதிலாக இருக்க வேண்டும் என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம் இந்த விடயம் தொடர்பாக தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துகின்ற தமிழ் கட்சிகளுக்கோ ஒரு புரிந்துணர்வோ செயற்பாட்டுத்திட்டம் உள்ளதாக நான் நினைக்கவில்லை ..

இதன் காரணமாக நாளாந்த அரசியலில்தான் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துகின்ற தமிழ் கட்சிகள் செயற்பாடுகின்றது என நான் நினைக்கின்றேன் … ஒரு இலக்கை வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும்.. அவ்வாறான போக்கில் செயற்படவில்லை ..ஆகவே அது தொடர்பாக தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டும். செயற்படவேண்டும் …ஒரு திட்டத்தை வைத்து செயற்பட வேண்டும் …என்பது எனது கருத்து ..

கேள்வி 06 .:

தமிழ் மக்களுக்கென்று ஒரு வெளிவிவகார கொள்கை ஒன்று இல்லாதது தான் இதற்கான பிரச்சினையாக பல கருத்துக்கள் இருக்கிறது..இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் 06:

வெளிவிவகார கொள்கை மட்டும் அல்லாது உள்விவகார கொள்கையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை .. தமிழ் கட்சிகளுடைய செயற்பாடுகள் நாளாந்த செயற்பாடாக மட்டும் உள்ளது.. அவர்களுக்கு ஒரு கொள்கைத்திட்டமோ, இலக்கோ இல்லை..

கேள்வி 07 :

பிற்போக்குத்தனமான அரசியலில் ஈடுபடுகின்றார்களா?

பதில் 07:

நிச்சயமாக ..reactionary politics தான் உள்ளது ..யதார்த்தத்தை புரிந்து கொண்டு ஒரு திட்டத்தை உருவாக்கி அதனை நோக்கி செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றேன் ? நான் நினைக்கின்றேன் தமிழ் கட்சிகள் சர்வதேச ரீதியாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நினைக்கிறார்கள் ..


நான் நினைக்கவில்லை சர்வதேச சமூகம் தீர்வைப்பெற்றுக்கொடுக்கும் என்று ..தமிழ் மக்கள் பிரதிநிதிகளை எதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்றும் தெரியவில்லை … அவர்கள் தலமைதாங்கி செயற்பட வேண்டும்..

கேள்வி08 :

ஐனாதிபதி அழைக்கும் பொழுது தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் பேச்சு வார்த்தைக்கு செல்ல வேண்டியது கட்டாயமில்லையா ? ஆகவே நிபந்தனைகளை முன்வைக்க வேண்டுமா? அது தொடர்பாக உங்கள் கருத்து?? ..

பதில். 08 :

நிச்சயமாக.. யாரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயமாக செல்லவேண்டியது இல்லை…கட்டாயப்படுத்தவும் முடியாது ..பேச்சுவார்த்தையினால் பலன் கிடைக்குமாக இருந்தால் மட்டும்
பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் ..ஜனாதிபதி அழைத்தார் என்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை..அதனுடைய அர்த்தம் தமிழ் கட்சிகள் பலவீனமாக உள்ளார்கள் என்பதாகும் ..கேள்வி கேட்காமல் அழைப்பை எற்றுக்கொள்வது என்பது தமிழ் கட்சியினுடைய பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது..நான் சொல்வது பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் போது கேள்வி கேட்கவேண்டும்.. நன்மை கிடைக்குமாக இருந்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்..


எனது கருத்து நீங்கள் சிந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.

கேள்வி 09:

இன்றய தினம் கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய ஊடக பேச்சாளர் கூறினார் ஐனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார் .ஆனால் இன்றுவரைஅது இடைநிறுத்தப்பட்டது .இன்றுவரை பேச்சுவார்த்தை க்கு அழைக்கவில்லை என்று.. தமிழர் தரப்பு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைக்கு வாருமாறு அழைக்கிறது என்று கோரிக்கையை முன்வைப்பது போல் இருக்கிறது அல்லவா??

பதில் 09:

நிச்சயமாக ..

கேள்வி 10.:

நீங்கள் சொல்கிறீர்கள்


கேள்வி :

இங்கு இருக்கின்ற அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை இந்தியாவினை பகைக்காத ஒரு அரசியலை மேற்கொள்கின்றனர்.


இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைக் கூட தெரிவிப்பது கிடையாது.

பதில் :

நிச்சயமாக அது ஒரு தவறான விடயம் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாத அவர்கள் சொல்வதைக் கேட்டு ஆடுவதன் மூலம் இதனால் நாங்கள் அடைந்து கொண்ட நன்மை என்ன? நன்மை என்ன என்று சிந்திக்க வேண்டும் அதன் அடிப்படையில் உண்மை உணரப்படும் ஆக இருந்தால் இந்தியாவுடன் பேரம் பேசுதல் வேண்டும் . சண்டை பிடிக்க வேண்டும் என்று அவர்களுடன் பேரம் பேச வேண்டும் .

கேள்வி :

ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் விடயம் தொடர்பாக மார்ச் மாதத்தில் அதிக அளவில் பேசப்படுகிறது. அந்த பொழுது இங்கிருந்து கடிதங்கள் அனுப்பப்படும், கடிதங்களில் யார் கையொப்பம் இடுவது எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பான விடயங்கள் இங்கு பேசப்படுகின்றது .

பொதுவாக இங்கு இருக்கின்ற கட்சிகள் இனப்படுகொலை என்ற ரீதியில் ஏற்றுக்கொள்கின்றார்கள். யுத்தக் குற்றங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் மனித உரிமைப் பேரவை கூட தமிழ் மக்களுடைய விடயத்தில் தமிழ் மக்கள் சார்பாக இடப்பட்ட அவர்கள் சார்பாக எந்த கருத்துகளையும் முன்வைக்கப்படவில்லை.

அங்கும் வெளிநாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முறையின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன தமிழ் மக்கள் நேர்மையான நிதியினைப் பெற்றுக் கொள்வதற்கு மனித உரிமைப் பேரவை சிறந்த முறையாகும் என்பது உங்களுடைய கருத்து ?

பதில் :

நான் நினைக்கவில்லை இறுதியில் தமிழ் மக்கள் மனித உரிமைகளில் இருந்து சிறந்த தீர்வை பெற்றுக் கொள்வார்கள் என்று .மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று. இதுதான் தமிழ் மக்களுடைய எதிர்பார்க்கும் கோரிக்கையாகவும் காணப்படுகின்றது.


அளவு ஜெனிவாவில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதை மட்டப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளாலாம். எழுதுகின்ற போதும் இவ்வாறு அதிக அளவு முதலீடுகளை மேற்கொள்வது சரியில்லை என்று எழுதியுள்ளேன்.

நாங்கள் விளங்குகின்றது ஜெனிவாவின் உடைய செயற்பாடுகள் அமெரிக்காவிற்கு மேற்குலக நாடுகளில் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அன்றி தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அன்று அல்ல.கடந்த 12 ஆண்டுகளை விட இறுதி இரண்டு ஆண்டுகளில் ஜெனிவாவில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும்போது இலங்கையினுடைய செயற்பாடுகளில் மேன்மை தன்மை காணப்படுகிறது.

அந்த வகையில் பார்க்கின்ற பொழுது அதனுடைய செயற்பாட்டிற்கு பெறுமதி உடையதாக நான் நினைக்கின்றேன்.

கேள்வி .

இலங்கையில் 20ஆவது திருத்தம் திருத்தப்படுகிறது அதனால் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வருகின்றன.அந்த வகையில் ஜனாதிபதி எடுக்கின்ற முடிவுகளில் சில சமயம் பின் வாங்குகிறார், நாடாளுமன்றத்தின் உடைய செயற்பாடுகளும் இலங்கையைப் பொறுத்த வரைக்கும் தொடர்ந்தும் ஒரு தோல்வி தன்மையே எதிர் கொள்கின்றது. இவ்வாறான நேரங்களில் ஒரு இனவாத ரீதியான செயற்பாடுகள் மூலம் ஒரு சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியினை தற்போதுள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?


பதில் :

ஆம் நிச்சயமாக அரசாங்கத்தில் இருக்கின்ற செல்வாக்கு வீழ்ச்சி அடைகின்ற போது அவர்கள் முன்னெடுக்கும் ஒரு விடயம் சிங்கள மக்களுக்கு தேசியவாத கொள்கைகளை வழங்குவது அதன் காரணமாக அரசாங்கத்தினுடைய செல்வாக்கு பாரதூரமாக வீழ்ச்சி அடையும் போது
சிறுபான்மையினர் மற்றும் ஏனைய குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது .

புதிதாக உருவாக்கப்படுகின்ற அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளையும் வழங்குவதாக நான் எதிர்பார்க்கவில்லை, ஏனெனில் இப்போது காணப்படுகின்ற நிலைமையை அடிப்படையில் ஒரு மென்மையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அரசிடம் இயலுமை காணப்படவில்லை.

கேள்வி –

இவ்வாறான விடயங்களுக்காக தான் யான சாரர் தலைமையுடைய ஒரு நாடு ஒரு சட்டம் என்றடிப்படையிலான விடயங்களுக்கான தலைமையை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள் .

பதில் –

நிச்சயமாக , இந்த தேசியவாத போக்கின் ஒரு பகுதியாக இதனை பக்க வேண்டும் , அது மட்டும் அல்ல ஏனைய குழுக்கள் கூட அமைக்க பட்டுள்ளன . சிங்கள தேசியவாதிகளின் சிங்கள இராணுவத்தையும் உட்கொண்டு வந்து உள்வாங்கி கொண்டு அமைக்கபட்ட பல குழுக்கள் காணப்படுகின்றன .

எனக்கு ஜபாகம் இருக்கின்ற சில குழுக்கள் என்று பார்ப்போமா இருந்தால் இருந்தால் இலங்கை வந்து ஒரு நன்னடத்தை கொண்ட sociaty யாக , சமூகமாக மாற்றுவற்கான குழு அமைக்கப்பட்டது. வடக்கு கிழக்கு தொல்பொருள் ஆய்வு செயலணி உருவாக்கப்பட்டது . அந்த அணிகளை உன்னிப்பாக பார்த்திங்கள் என்றால் அதனுடைய உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சிங்கள தேசியவாதிகளாகவும் , இராணுவ அதிகாரிகளாகவும் நீங்கள் காணக்கூடியதாகவும் உள்ளது .இதெல்லாம் அந்த போகினுடைய பகுதியாகத்தான் இருக்குகின்றது .

கேள்வி –

அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் தொடர்ந்தும் தோல்வி நிலையில் இருக்கின்றது . மக்கள் தொடந்தும் போராட்ட நிலையில் உள்ளார்கள் . ஆட்சி மாற்றத்திற்கான நிலையில் அரசாங்கம் செல்கின்றது என்ற விமர்சனம் இருக்கிறது இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றது .

எதிர்காலத்தில் இந்தியா பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பதாகவும் செல்லவிருப்பதாகும் கூறப்படுகின்றது . ஆகவே 2015ம் ஆண்டில் ஏற்பட்ட ஓர் ஆட்சி மாற்றத்திற்கான செயற்பாடுகளை இலங்கைக்கு வெளியில் முன்னெடுப்பற்கு பிற நாடுகள் முயற்சி எடுக்கின்றனவா ? தற்போழுதுள்ள சூழலில் பொறுத்த வரையில்

பதில் –

இலங்கையில் உடனடியா ஆட்சி மாற்றத்தை ஏட்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எந்த மேற்கு நாடுகள் செயற்படுகின்றன என்று பெரிய ஆதாரங்கள் எனக்கு இதுவரைக்கும் இருக்கின்றன எண்டு ஜோசிக்கவில்லை . ஆக குறைந்தது வெளிப்படையான ஒரு திட்டம் என்று கூட நான் நினைக்கவில்லை . மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பை கூப்பிட்டு கதைப்பது ஊடாக அந்த விதமான மாற்றங்களை அடைந்து கொள்ள முடியுமா என்பது கூட கொஞ்சம் கஸ்டம் .

ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே அரசாங்கத்திலுள்ள பகுதி அல்ல .அவர்கள் ஏற்கனவே வெளியில் இருக்கின்ற பகுதி . இக்கட்டான ஒரு நிலை வருகின்ற பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற சத்தியம் மிகவும் குறைவானது . அவ்விதமான நோக்கத்தின் அடிப்படையில் ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பிணை அழைத்து பிரதான தந்திரோபாயமாக இருக்கும் என்பது நான் நினைக்கவில்லை .

அப்படியாக இருக்குமென்றால் நீங்கள் target பண்ண வேண்டியது அரசாங்கத்திலுள்ள சிறிய குழுக்கள்.

கேள்வி –

அரசாங்கத்திற்குள்ளும் பிரச்சனைகள் இருப்பதற்கான கருத்துக்கள் தோற்றுவிக்கப்படுகின்றது ஊடக சந்திப்புகளில் வெளிப்படுத்தப்படுகின்றது அல்லவா ?

பதில் –

அந்த விதமான செயற்பாடுகள் மேற்கு நாடுகள் அழுத்தம் காரணமாக ஏற்படுகின்றனவா என்ற கேள்வி. நான் நினைக்கின்றேன் அந்தவிதமான செயற்பாடுகளை ஏற்படுத்துவது உள்ளூர் அழுத்தம் காரணமாக .மேற்கு நாடுகள் அழுத்தம் காரணமாக அல்ல .

கேள்வி –

ஆகவே இவர்களை அமெரிக்காவிற்கு தற்பொழுது கூப்பிட்டு பேசுவதற்கு அல்லது இந்தியா பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நினைகின்றீர்கள் ?

பதில் –

இலங்கை அரசாங்கம் மீதான ஒரு அழுத்தத்தை செய்வற்காக

கேள்வி –

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்திற்கு இவர்களுடன் பேசி ஒரு அழுத்தத்தை கொடுக்க முடியும் என்று நம்பலாமா ?

பதில் –

நிச்சயமாக , மேற்கு நாடுகள் , இந்தியா பொறுத்தவரையில் இலங்கை தொடர்பான பிரச்சினை Gas சிலிண்டர் வெடிக்கிறதும் பொருளாதாரப்பிரச்சினை அல்ல.மாறாக இலங்கை மிகத்தீவிரமாக சீனா நோக்கிச்செல்வது தான் பிரதான நோக்கமாகும்.

கேள்வி:-

பஷில் ராஜபக்ஸ இந்தியாவில் இருக்கின்ற போது யாழ்ப்பாணத்தில்
முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி தொடர்பில் பின்வாங்கி இருக்கின்றது.அதாவது மாலைதீவிற்கு கொண்டு செல்வதற்கான ஓர் அறிவிப்பை தெரிவித்தது.

பதில்-:

அந்த அறிவிப்பு ஒரு சரியான அறிவிப்பில்லை.இது சீனத்தூதரகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அது தொடர்பில் எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியாது.முதலாவது அந்தச் செய்தி வந்தது உண்மை.அந்தச்செய்தி உண்மையானது இல்லை என்று சீனத்தூதரகம் இப்போது அறிவித்திருக்கின்றது.ஆகவே அந்தச்செயற்றிட்டம் தொடர்ந்து இடம் பெறலாம் அல்லது இடம் பெறாமலும் இருக்கலாம்.

நான் நினைக்கின்றேன் இந்தியாவும் மேற்கு நாடுகளும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இந்தத் தொடர்பாடல்களை வினவுவதற்கான காரணம் இலங்கைக்கு ஒரு செய்தி அல்லது ஒரு சிக்னல் அனுப்புவதற்காக முயற்சி செய்கின்றார்கள்.இந்தப்போக்கு தொடருமாக இருந்தால் நாங்கள் தமிழ்ப்பிரச்சினையை உங்களுக்கு எதிராக மாற்றுவதற்கான சாத்தியம் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதற்காக அது தொடர்பில் ஜெனீவாவில் இடம் பெறுகின்ற செயன்முறை பயன்படுத்தப்படலாம்.

அதே சமயம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அழைத்துப் பேசுவதினூடாக கொண்டுவரப்படுத்தப்படுகின்ற அழுத்தம் காரணமாக இலங்கை சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளுமாக இருந்தால் உடனடியாக இந்த நாடுகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை நிச்சயமாக குறைத்துக் கொள்வார்கள்.

கேள்வி –

இலங்கையினுடைய பொருளாதார நிலைமைகள் என்பது மிக மோசமாக இருக் கின்றது.ஆகவே இந்த பொருளாதார விடயங்களை எவ்வாறு கைக்கொண்டு இலங்கை தொடர்ந்து பயணிக்கும் என்று நினைக்கின்றீர்கள்? வெளிநாடுகள் அந்தளவுக்கு இலங்கைக்கு தேவையான கடன்களை தொடர்ந்து வழங்கும் என்று எதிர் பாக்க முடியுமா?

பதில் –

உங்களுக்கு தெரியும் நான் பொருளாதார ஆய்வாளர் அல்ல .பொருளாதாரம் தொடர்பான confident ஆன தகவல்களை முன்வைக்கலாம் என்று நினைக்கேல.

கேள்வி –

அரசியல் ரீதியாக முடிவுகளின் அடிப்படையில் தான் வெளிநாடுகள் இலங்கைக்கு கடன் குடுக்க போகின்றது தன்னுடைய நலன் சார்ந்து . அதனிப்படையில் கடன் குடுக்க கடன் குடுக்க வேண்டிய தேவை சீனாவிற்கு அல்லது இந்தியாவிற்கு அல்லது மேற்குலகம் சார்ந்து இலங்கையினை தங்களுடைய தேவைக்கு வைத்திருக்கவேண்டிய அவசியம் இருக்கின்ற பொழுது இலங்கைக்கு தேவையனவற்றை இவர்கள் குடுத்து கொள்வார்கள் அல்லவா .

பதில் –

நிச்சயமாக , அரசியல் ரீதியாக என்று போகின்ற பொழுது இலங்கையினுடைய பிரதானமான பிரச்சனை என்பது dollers இல்லாமல் இருப்பது திறைசேரி யில் போதுமான அளவிற்கு வெளிநாட்டு நாணயங்கள் இல்லாமல் இருப்பது காரணமாக தான் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. வாகன இறக்குமதி செய்ய முடியாது உரம் இறக்குமதி செய்ய முடியாது இதெல்லாம் doller இல்லாம வந்த பிரச்சனைகள் . .

அது போதுமான அளவு doller உள்ளீடு வராமல் இருக்குமாக இருந்தால் இந்த பொருளாதார பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து செல்லும் என்று தான் நான் நினைக்கின்றேன் .இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுக்கின்ற கொள்ளைகள் அந்த நெருக்கடியை தீர்த்துக்கொள்வற்கு போதுமானவை என்று நினைக்கவில்லை .


உதாரணமாக , doller ல் காசு வைத்திருக்க முடியாது என்றவிதமான ஒரு கொள்கை அவர்கள் கொண்டுவந்துள்ளார்கள் . எல்லா காசும் உடனடியாக இலங்கை நாணயத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று . அப்படி வருகின்ற போது வெளிநாட்டிலிருந்து உள்ளுக்கு doller அனுப்புகின்றவர்கள் அனுப்ப மாட்டார்கள் . நான் அனுப்ப மாட்டேன் .

அது வந்து எதிர்காலத்தில் அந்த பிரச்சனை தீர்க்க போகிறது இல்லை . அப்போது வெளிநாட்டிலிருந்து யாராவது காசு குடுக்க வேண்டும் இலங்கையின் பிரச்சனையை தீர்க்க . அந்தடிப்படியில் பார்க்கின்ற போது உடனடியாக உறுதியாக உதவி செய்ய கூடியது சீனா தான் . சீனாவிற்கு இந்த இயலுமை இருக்கின்றது .இந்த சீனாவின் நெருக்கடி இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகின்ற ஒரு செயல் முறையாக அமையலாம் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அதற்கான விருப்பம் இந்தியாவிலையும் மேற்கு நாடுகளிலும் காணப்படலாம்.

ஆனால் அந்த இயலுமை இல்லை .அமெரிக்காவிலும் காசு இல்லை அமெரிக்காவும் கடனில் ஓடும் நாடு தான் .அந்தளவிற்கு காசியில்லை. விருப்பம் இருந்தாலும் செயற்பாடு அடிப்படையில் இலங்கைக்கு அந்த உதவியை செய்ய கூடிய இயலுமை இந்தியாவிற்கும் காணப்படும் .

கேள்வி – இவ்வளவு நேரமும் இந்தக் கலந்துரையாடலில் ஈடுப்பட்ட பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் அவர்களுக்கு நன்றிகள் .

பதில் – நன்றிகள் .

Leave A Reply

Your email address will not be published.