Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

கூட்டமைப்பின் தலைமை தமிழரசுக் கட்சியிடமே – சுமந்திரன் திட்டவட்டம்

0 14

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழரசுக் கட்சியிடமே இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

பங்காளி கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்பின் தலைமை இனி கூட்டுத்தலைமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். என குறிப்பிட்டு கேட்கப்பட்ட கேள்விக்கே சுமந்திரன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எப்போதும் பிரதான கட்சியே தலைமை பொறுப்பினை வகிக்கும். இதுவே யதார்தமான விடயம். தென்னிலங்கையில் கூட அதுவே நடைமுறை. அதுபோன்று கூட்டமைப்பின் தலைமை எப்போதும் தமிழரசுக் கட்சியிடமே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.