Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் செய்த ட்விட்டர் பதிவு

0 6
ஆசிய அபிவிருத்தி வங்கியின்  தலைவர் மசட்சுகு அசகாவா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (10) இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று காலை அவரை சுற்றுலா  
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் பிராந்திய கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் வரவேற்றனர், இராஜாங்க அமைச்சர்களான டி.வி. சானக மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக இருந்த காலத்தில்   இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது 
உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். இருப்பினும், அவர் முன்னதாக 1991 இல் முன்னாள் ஆசிய அபிவிருத்தி 
வங்கியின் தலைவர் கிமிமாசா தருமிசுவுடன்  ஆலோசகராக இலங்கை வந்திருந்தார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில், அசகாவா, “இலங்கைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. 1991 ஆம் ஆண்டு முன்னாள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கிமிமாசா தருமிசுவுடன் இந்த அழகான நாட்டிற்கு நான் முதன்முதலில் வந்தேன். அப்போது நான் அவருடைய தலைமை ஆலோசகராக இருந்தேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பரில் நமது வருடாந்த கூட்டத்தை நடத்த இலங்கை தயாராகி வரும் நிலையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக எனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக நான் கொழும்பு வந்துள்ளேன். என பதிவிடப்பட்டுள்ளது.




 
Leave A Reply

Your email address will not be published.