இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு ஹைதராபாத் இல்லத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சந்திப்பின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிறிங்லாவையும் (Harsh Vardhan Shringla) வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சந்தித்து கலந்துரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.