ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆக்கபூர்வமான வேலைகளை தமிழ் தரப்புக்கள் முன்னெடுக்காமல் அறிக்கைகளை மட்டும் விட்டுவிட்டு சாதாரணமாக கடந்து செல்லுகின்றனர் என உலக தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ மரியதாஸ் குற்றம் சாட்டுகின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினை உரிய முறையில் அறிந்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போதுதான் தமிழ் சமூதாயகத்திற்கு நன்மைகள் கிடைக்கும். அதனை விடுத்து எல்லாவற்றுக்கு பூவிசார் அரசியலை மட்டும் பேசுவதனால் பயனில்லை.
எல்லோருடைய கோரிக்கைகளிலும் வடமாகாண சபையின் இனஅழிப்பு தீர்மானத்தினை குறிப்பிட்டு, இனப்படுகொலைக்கான நீதியினை எவ்வித விட்டுக்கொடுப்பின்றியும் கோருதல் வேண்டும்.
தினமும் நடக்கின்ற விடயங்களை முறைப்பாடுகளாக தொடர்ந்து முன்னெடுக்கின்ற போதுதான் ஜநா அறிக்கையாளர்களின் கவனம் இலங்கை தமிழ் தரப்புக்களின் பிரச்சனைகளில் திரும்பும்.
தமிழ் சமூதாயமாக மிகப்பெரிய எண்ணிக்கையில் இவ்விடயத்தினை ஒரு குழுவாக முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு முன்னெடுத்த காரணத்தினாலே ரோஹிங்கியா முஸ்லீம் மக்களின் பிரச்சனை, இன்று ஒரு சர்வதேச பிரச்சனையாக பார்ப்பதற்கு வழிவகுத்தது.
மார்ச் கூட்டத்தொடரில் மனித உரிமையாளரின் வெளிவர இருக்கும் அறிக்கைக்கு தமிழ் தரப்புக்கள் கடிதங்களை அனுப்புவதற்கான கால எல்லை கடந்துவிட்டனர். டிசம்பர் 31 திகதி வரையே அந்த கோரிக்கைகள் முன்வைக்கமுடியும். தற்போது அந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுவிட்டது. என தெரிவித்தார்.